Automobile Tamilan

ட்ரையல்பிளேசர் vs ஃபார்ச்சூனர் vs சான்டா ஃபீ vs பஜெரோ ஸ்போர்ட் – ஒப்பீடு

செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி காரின் போட்டியாளர்களான ஃபார்ச்சூனர் , சான்டா ஃபீ ,  பஜெரோ ஸ்போர்ட் மற்றும் ரெக்ஸ்டான்  காருடன் ஓர்  ஒப்பீட்டு விமர்சனத்தினை இந்த செய்தி தொகுப்பில் கானலாம்.
செவர்லே ட்ரையல்பிளேசர்

தோற்றம்

5 பிரிமியம் எஸ்யூவி கார்களுமே தோற்றத்தில் ஒன்றுக்கொன்று சளைத்த மாடல்கள் இல்லை. மிக பிரமாண்டமாக மிரட்டும் எஸ்யூவி கார்களாகவே இவைகள் விளங்குகின்றது.

உட்புறம்

தாரளமான இடவசதியினை கொண்டு எஸ்யூவி கார்களில் எதுவும் மிக குறைவான இடவசதி என்று சொல்வதற்க்கில்லை. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் வசதிகளை அனைத்திலும் பெற்றுள்ளன.

என்ஜின்

ட்ரெயில்பிளேசர் போட்டியாளர்களை விட அதிக ஆற்றலை வழங்குகின்றது. 197பிஎச்பி ஆற்றலை வழங்குகின்றது. இதற்க்கு அடுத்தப்பட்டியாக 194 ஹெச்பி ஆற்றலை சான்டா ஃபீ வழங்குகின்றது. சந்தையின் முதன்மையான காரான ஃபார்ச்சசூனர் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் உள்ளது. ரெக்ஸ்டான் இரண்டு வித ஆற்றல் ஆப்ஷனில் உள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் மட்டுமே ட்ரையல்பிளேசர் கிடைக்கின்றது. மற்றவை ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் என இரண்டிலும் கிடைக்கின்றது.

பாதுகாப்பு மற்றும் அவசியமான வசதிகள்

டாப் வேரியண்டில் இரண்டு காற்றுப்பைகளை கொண்ட மாடல்கள் ட்ரையில்பிளேசர் , ஃபார்ச்சூனர் , பஜெரோ ஸ்போர்ட் போன்றவை பெற்றுள்ளது. சாங்யாங் ரெக்ஸ்டான் 4 காற்றுப்பைகள் , சான்டா ஃபீ 6 காற்றுப்பைகளை பெற்றுள்ளது.

ஏபிஎஸ் இபி டி , இஎஸ்சி , டிசிஎஸ் மலையேற இறங்க உதவி போன்றவை அனைத்து மாடல்களிலும் உள்ளது.

விலை

ரூ.20.14 லட்சத்தில் தொடங்கும் ரெக்ஸ்டான் மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பீடுகையில் விலை குறைவாகும். அதனை தொடர்ந்து ஃபார்ச்சூனர் , பஜெரோ ஸ்போர்ட் , ட்ரையல்பிளேசர் மற்றும் சான்டா ஃபீ விளங்குகின்றது.

புதிய ஃபார்ச்சூனர்

Chevrolet Trailblazer vs Fortuner vs Endeavour vs Santa Fe vs Pajero Sport vs Rexton – Compare

Exit mobile version