நிசான் ஹை பெர்ஃபாமென்ஸ் சென்டர் திறப்பு – ஜிடி-ஆர்

இந்தியாவில் நிசான் நிறுவனம் டிசம்பர் 2ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ததை தொடர்ந்து பிரத்யேக முதல் நிசான் ஹை பெர்ஃபாமென்ஸ் சென்டர் (Nissan High Performance Centre – NHPC ) நொய்டாவில் திறக்கப்பட்டுள்ளது. என்ஹெபிசி வாயிலாக மட்டுமே நிசான் ஜிடி-ஆர் விற்பனை செய்யப்பட உள்ளது.

டெல்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஹை பெர்ஃபாமென்ஸ் சென்டர் வாயிலாகவே மட்டுமே இந்தியா முழுமைக்கு ஜிடி-ஆர் கார்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யப்பட உள்ளது. இந்த மையத்தின் வாயிலாக உலகதரமான சேவையை வழங்க நிசான் திட்டமிட்டுள்ளது. எனவே இதற்காக பிரத்யேக ஜிடி-ஆர் கார்களுக்கு தேவையான வீல் அலைன்மென்ட் மெஷின்  , என்ஜின் , கியர்பாக்ஸ் , பிரேக்கிங் சிஸ்டம் போன்றவற்றுக்கான உபகரணங்கள் அனைத்தும் ஜப்பானில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மையத்தில் நைட்ரஜன் காற்று நிரப்பும் நிலையம் மற்றும் ஜிடி-ஆர் செயல்திறனை மேம்படுத்தும் கருவிகளும் இடம்பெற்றுள்ளது.

நிசான் ஜிடி-ஆர் கார்களுக்காக பிரத்யேக முறையில் பயிற்சி அளிக்கப்பட்ட டெக்னிஷியன்களை கொண்டு சர்வீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் நாடு முழுவதும் ஜிடி-ஆர் கார்களை நேரில் சென்று சர்வீஸ் செய்யும் வகையில் ஃபிளையிங் டாக்டர்ஸ் என்ற பெயரில் மொபைல் டெக்னிஷியன்கள் செயல்பட உள்ளனர். உலகதரமான சேவையை நிசான் ஜிடி-ஆர் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என நிசான் தெரிவித்துள்ளது.

Nissan High Performance Centre Address : Neo Nissan, C-26, Sector-3, Near Rajnigandha Chowk in Noida

2017 நிசான் ஜிடி-ஆர் கார் படங்கள்

Exit mobile version