பஜாஜ் அவென்ஜர் 400 மோட்டார்சைக்கிள் வருகின்றதா ?

பிரசத்தி பெற்ற குறைந்த விலை க்ரூஸர் ரக பஜாஜ் அவென்ஜர் வரிசை பைக்குகள் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. அதனை தொடரும் வகையில் அதிக செயல்திறன் மிக்க அவென்ஜர் 400 க்ரூஸர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எவ்விதமான தோற்ற மாற்றங்களும் பெரிதாக இல்லாமல் வந்த புதிய அவென்ஜர் வரிசை பைக்குகளில் குறைந்த விலை அவென்ஜர் 150 பைக் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. மேலும் முந்தைய மாடல்களான அவென்ஜர் ஸ்டீரிட் 220 , அவென்ஜர் க்ரூஸ் 220 போன்ற மாடல்களும் சிறப்பான வண்ணங்களுடன் வந்துள்ளது.

கேடிஎம் டியூக் மற்றும் ஆர்சி390 பைக்குகளுக்கு தயாரிக்கப்பட்டு வரும் 375சிசி என்ஜினே அவென்ஜர் 400 பைக்கில் ஆற்றல் மாற்றங்களுடன் பொருத்தப்பட்டலாம் என தெரிகின்றது. மேலும் பிரிமியம் அம்சங்களுடன் தோற்ற மாற்றங்களை பெற்ற மாடலாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் புதிய அவென்ஜர் 400 விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Exit mobile version