Categories: Auto News

பஜாஜ் பல்சர் VS400 பைக் வருகையில் தமாதம்

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள பஜாஜ் பல்சர் VS400 பைக் வருகை ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு இந்த மாதத்திலும் விஎஸ்400 வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

bajaj-pulsar-cs400

சிஎஸ்400 என ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளிப்பட்ட பஜாஜ் பல்சர் விஎஸ் 400 என பெயர் சமீபத்தில் உறுதியான நிலையில் பல்வேறு விதமான தகவல்கள் மற்றும் ஸ்பை படங்கள் என பல தகவல்கள் வெளியாகிவிட்ட நிலையில் விற்பனைக்கான தேதி அறிவிக்கப்படமால் உள்ளது.

ராஜீவ் பஜாஜ் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என தெரிவித்திருந்த நிலையில் விற்பனைக்கு வராத பல்சர் விஎஸ் 400 பைக் வருகை குறித்து வணிக அபிவிருத்தி தலைவர் S ரவிக்குமார் மணிகன்ட்ரோல் தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் வருகின்ற தசரா மற்றும் தீபாவளி பண்டிகையில் வாகன விற்பனை அமோகமாக இருக்கும் என்பதனால் தொடக்கநிலை மாடல்களின் (சிடி100 , பிளாட்டினா , பல்சர் வரிசை , டிஸ்கவர், அவென்ஜர்) உற்பத்தி திறனை அதிகரிப்பது அவற்றை டீலர்களுக்கு கொண்டு செல்வது போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதனால் பல்சர் விஎஸ்400 பைக் விற்பனைக்கு அடுத்த மாத இறுதியில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பஜாஜ் பல்சர் VS400 எஞ்சின்

பல்சர் விஎஸ்400 பைக்கில் 34.51 hp (25.74 KW) ஆற்றல் 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குள் , பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம் பெற்றுள்ளது.  இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் டியூவல் சேனல் ஏபிஎஸ் இடம்பெற்றுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , எல்இடி டெயில் லைட் போன்ற வசதிகளுடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர்  , பெட்ரோல் டேங்க் மேல் பகுதியில் டிஸ்பிளே ,  போன்றவை இடம்பெற்றிருக்கும்.

பஜாஜ் பல்சர் VS400 பைக்கின் எதிர்பார்க்கப்படும் விலை விலை ரூ. 1.80 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலை இருக்கலாம்.

வருகின்ற பண்டிகை காலத்தில் மிக அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் நோக்கில் அனைத்து வாகன தயாரிப்பாளர்களும் தீவரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Recent Posts

பஸால்டின் இன்டீரியர் டீசரை வெளியிட்ட சிட்ரன்

சிட்ரன் இந்தியாவின் C-Cube திட்டத்தின் கீழ் வெளியிட உள்ள 4வது மாடலான பஸால்ட் (Citroen Basalt) கூபே எஸ்யூவி ஆகஸ்ட்…

1 day ago

குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை உறுதி செய்த நிசான்

அடுத்த 2025-2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் உட்பட 4 கார்களை…

1 day ago

நிசான் X-Trail 2024 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ரூ.36 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற நிசானின் 2024 X-Trail எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள…

1 day ago

ஆகஸ்ட் 15., மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி அறிமுகமாகின்றது

சந்தையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரின் அடிப்படையில் தார் ராக்ஸ் (THAR ROXX) என்ற பெயரினை…

3 days ago

ஹீரோவின் சக்திவாய்ந்த எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் எப்பொழுது.?

இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த…

3 days ago

ஃப்ளிப்கார்டில் பஜாஜ் பைக்குகள் விற்பனை துவங்கியது

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் வலைதளமான ப்ளிப்கார்ட்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக…

3 days ago