பஜாஜ் V15 பைக் அறிமுகம் – ஐஎன்எஸ் விக்ராந்த்

பஜாஜ் ஆட்டோ V பிராண்டு என்ற புதிய பிராண்டில் பஜாஜ் V15 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் மெட்டலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பஜாஜ் வி பைக் நேர்த்தியான கம்யூட்டர் பைக்காக மாறுபட்ட டிசைன் கலவையை கொண்டுள்ளது.

புதிய ஸ்டைல் தோற்றங்களுடன் க்ரூஸர் மற்றும் கஃபே ரேஸர் பைக்குகளின் தாத்பரியங்களை கொண்டு மிக நேர்த்தியாக கம்யூட்டர் பிரிவில் வித்தியாசமான ஸ்டைலை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகபுதிய பிரிவினை பஜாஜ் வி15 உருவாக்கியுள்ளது.

12PS ஆற்றலை வழங்கும் 150சிசி DTS-i என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 13Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ட்வீன் ஸ்பிரிங் ஹைடெராலிக் வகை பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்க பிரேக் 240மிமீ டிஸ்க் மற்றும் 130மிமீ டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது.

வரும் மார்ச் முதல் விற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் வி பைக்கின் விலை ரூ.60000 முதல் 70000 வரையிலான விலைக்குள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[envira-gallery id="5741"]

 

Share