• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

by MR.Durai
8 August 2026, 12:54 pm
in Bike News
0
ShareTweetSend

Bajaj Pulsar N160 s and Bajaj Pulsar N160 ss

இந்தியாவின் பிரீமியம் ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையின் ஆரம்ப நிலை வரிசையான 150cc-160cc துவக்கத்தில் பிரசத்தி பெற்ற பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் N160 S மற்றும் N160 SS ஆகிய இரண்டிலும் முந்தைய 2 வால்வுகளுக்கு மாற்றாக புதிய 4 வால்வுகளை கொண்ட என்ஜின் ஆக ரூ.1,33,511 மற்றும் ரூ.1,42,585 (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

4 வால்வு என்ஜினாக மட்டுமல்லாமல் ரைடு மோடுகள் மற்றும் கூகுள் மேப்ஸ் வசதியுடன் கூடிய 5 அங்குல TFT திரையுடன் களமிறங்கியுள்ள பைக்குகள், சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

புதிய N160 S மற்றும் SS மாடல்களின் மிக முக்கியமான சிறப்பம்சமே இதன் என்ஜின் மேம்பாடுதான் பழைய 2-வால்வு என்ஜினுக்குப் பதிலாக, அதிக திறன் கொண்ட புதிய 4-வால்வு என்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டு164.5cc, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் பவர் 18.5 PS (18.24 bhp) @ 9,500 rpm (முந்தைய மாடலை விட 2.5 bhp அதிகம்), டார்க் 14.4 Nm @ 8,000 rpm உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று 0 முதல் 60 கி.மீ வேகத்தை வெறும் 4.5 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் வல்லமை கொண்டது.

அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள்

பஜாஜ் நிறுவனம் தனது 160cc பிரிவிலேயே முதன்முறையாக பல பிரீமியம் தொழில்நுட்பங்களை இந்த புதிய மாடல்களில் புகுத்தியுள்ளது குறிப்பாக எலக்ட்ரானிக் த்ரோட்டில் மற்றம் ரைடிங் மோடுகள் எனப்படுவதுன் மூலம் intelligent Throttle தொழில்நுட்பம் மூலம் Road, Rain, Sport, மற்றும் Off-Road ஆகிய 4 விதமான ரைடிங் மாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிரால் டெக்னாலஜி (Crawl Technology) நகரத்தின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பாதைகளில், கிளட்ச் இயக்காமலேயே குறைந்த வேகத்தில் மெதுவாகச் செல்ல இந்த வசதி உதவுகிறது.

டிஜிட்டல் டிஸ்ப்ளே & கனெக்டிவிட்டி: N160 S மாடலில் 5-இன்ச் LCD திரையும், ‘Turn-by-Turn’ நேவிகேஷன் வசதியும் உள்ளன.

N160 SS மாடலில் 5-இன்ச் TFT கலர் திரை, ப்ளூடூத் உடன் Wi-Fi கனெக்டிவிட்டி மற்றும் ‘கூகுள் மேப்’ வசதிகள் கொடுக்கப்பட்டு கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோல் (Traction Control) மற்றும் அட்ஜஸ்டபிள் லீவர்கள் இடம்பெற்றுள்ளன.

முன்பக்கத்தில் புதிய 37mm USD ஃபோர்க்குகள் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு முன்புறம் 300mm டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. SS வேரியண்ட்டில் டியூல்-சேனல் ABS சிஸ்டம் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

அட்லாண்டிக் ப்ளூ, பேர்ல் மெட்டாலிக் ஒயிட் மற்றும் புரூக்ளின் பிளாக் ஆகிய 3 கவர்ச்சிகரமான நிறங்களுடன் 14-லிட்டர் ஃபியூயல் டேங்க், 165mm கிரவுண்ட் கிளீயரன்ஸ் மற்றும் 151 கிலோ எடையை கொண்டுள்ளது.

Tags: Bajaj Pulsar N160Bajaj Pulsar N160 SBajaj Pulsar N160 SS
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version