Home Auto News

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் இந்தியா வருகையில் தாமதம் ?

தமிழகத்தின் டிவிஎஸ் மற்றும் ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவான பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் வருகையில் தொடர்ந்து இந்திய வருகையில் தாமதிக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச சந்தையில் விரைவில் விற்பனைக்கு செல்ல உள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்

  • பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கினை டிவிஎஸ் மோட்டார்ஸ் ஓசூரில் தயாரிக்கின்றது.
  • 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது
  • முதலாவதாக ஐரோப்பா நாடுகளில் விற்பனைக்கு செல்ல உள்ளது.

டிவிஎஸ் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள முதல் மாடலான பிஎம்டபிள்யூ  ஜி310 ஆர் பைக் 250சிசி முதல் 350 சிசி வரையிலான சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடல்களுக்கு மிகுந்த சவாலாக அமைய உள்ளது.

ஜி 310 ஆர் பைக்கில் 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 28Nm பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்த மாதம் விற்பனைக்ககு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் இல்லை என உறுதியாகிவிட்ட நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதவாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாடலின் அடிப்படையிலே தயாரிக்கப்பட்டு வருகின்ற  டிவிஎஸ் அகுலா 310 மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் ஆகிய மாடல்கள் இந்த வருட இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

கேடிஎம் ட்யூக் 390 பைக்கிற்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக வரவுள்ள ஜி 310 ஆர் பைக் முதன்முறையாக ஐரோப்பா சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு செல்ல உள்ளது.

மேலும் படிக்கலாமே,..! ஜி310 ஆர் பைக் மற்றும் பிஎம்டபிள்யூ பைக் செய்திகள்..!

 

Exit mobile version