Site icon Automobile Tamilan

பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கைகோர்த்தது

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோரடு இனைந்து புதிய 250சிசி முதல் 500சிசி பைக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த பைக்கள் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய ரக ஸ்போர்ட்ஸ் பைக்கள் உருவாக்குவதற்க்காக நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளனர். இதனால் பிஎம்டபிள்யூ ஆசியா சந்தையில் வலுவான சந்தையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

59439 tvsbmw

 பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியல் உருவாகும் பைக்கள் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தாலும் வெளிநாடுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தாலும் விற்க்கப்படும்.

2015 ஆம் ஆண்டில் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்படும் பைக்கள் விற்பனைக்கு வரலாம். உலகப் புகழ் பெற்ற ஸ்போர்ட்ஸ் பைக்களை பிஎம்டபிள்யூ மோட்டோரடு விற்பனை செய்து வருகின்றது. எனவே மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் நுட்பத்தினை டிவிஎஸ் பெறும். பிஎம்டபிள்யூ நிறுவனம் மிக சிறப்பான அடித்தளத்தினை இந்தியா மற்றும் ஆசியாவில் அமைக்கும்.

இந்தியாவிற்க்கு அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்கள் கிடைக்கும்.

Exit mobile version