பிஎம்டபிள்யூ G310R பைக் சோதனை ஓட்டம்

டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாகியுள்ள பிஎம்டபிள்யூ G310R பைக் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் உள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

BMW G 310 R

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த மாடலை போலவே தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலும் உள்ளது. முதன்முறையாக இந்தியாவில் சோதனை நடத்தப்பட தொடங்கியுள்ள ஜி310ஆர் பைக்கினை டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது.

34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 313சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் இழுவைதிறன் 28 Nm ஆகும். பிஎம்டபிள்யூ G310R பைக்கின் உச்சவேகம் மணிக்கு 144கிமீ ஆகும்.  இதன் முன்பக்க டயரில் அப்சைட் டவுன் ஃபோர்க்குகள் , பின்பக்க டயரில் மோனோஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது. முன்பக்க டயரில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றிருக்கும். இதன் எடை 158.5 கிலோ ஆகும்.

பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஓசூர் டிவிஎஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

வரவிருக்கும் அப்பாச்சி ஆர்டிஆர் 300 பைக்கிலும் இதே என்ஜினே பொருத்தப்பட்டிருக்கும். அடுத்த சில மாதங்களில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ள பிஎம்டபிள்யூ G310R பைக் விலை ரூ. 3 லட்சத்தில் தொடங்கும்.

Share