Automobile Tamilan

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வெல்லுமா ?

வரவிருக்கும் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மிரட்டலான முகப்பு தோற்றத்தில் மிகவும் கம்பிரமாக உள்ளது. இரண்டு என்ஜின்ஆப்ஷனில் கிடைக்கும். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் விற்பனைக்கு வரும்.
ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி

மூன்றாம் தலைமுறை  ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி கம்பிரமான முகப்பினை கொண்டுள்ளது. முந்தைய மாடலை விட பல மடங்கு தோற்ற அமைப்பில் மாறுதலை கண்டுள்ளது.

இரண்டு ஸ்லாட் குரோம் பூச்சு கிரிலுக்கு மத்தியில் ஃபோர்டு இலச்சினை பளிச்சென பெரிதாக தெரிகின்றது. முகப்பு விளக்கு அமைப்பு ,பகல் நேர எல்இடி விளக்குகள் , மற்றும் பனி விளக்குகளுக்கான அறை போன்றவை சிறப்பான தோற்றத்தினை தருகின்றது.

பக்கவாட்டில் மிக அதிகப்படியான உயரம் கொண்ட வீல் ஆர்ச் புதிய ஆலாய் வீல்களை கொண்டுள்ளது. பின்புறத்தில் நல்லதொரு மாற்றத்தினை கண்டுள்ளது.ஸ்பேர் வீலை நீக்கிவிட்டு மிக சிறப்பான குரோம் பட்டையை பின்புறம் தந்துள்ளனர்.

உட்புறத்தில் டேஸ்போர்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. கேபின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 8 இஞ்ச் தொடுதிரை அமைப்பில் ஃபோர்டு SYNC 2 இன்ஃபோடெயின்மென்ட் கொண்டுள்ளது. மேலும் செயற்க்கைகோள் தொடர்புடன் கூடிய வரைபட வசதி மற்றும் பின்புற பார்க்கும் கேமரா உள்ளது.

முந்தைய மாடலைவிட புதிய எண்டெவர் எஸ்யூவி காரில் இரண்டு மற்றும் மூன்றாவது வரிசைகளில்  இருக்கைகளுக்கு இடையிலான இடவசதியை அதிகரித்துள்ளனர்.

என்ஜின்

இரண்டு என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு வரலாம். அவை 148பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் என்ஜினும் 197பிஎச்பி ஆற்றலை தரவல்ல 3.2 லிட்டர் என்ஜினிலும் கிடைக்கும். 6 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன்  2.2 என்ஜினிலும் 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் 3.2 லிட்டர் என்ஜினில் இருக்கலாம் என தெரிகின்றது.

7 இருக்கைகள் கொண்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி காரில் பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது . அவை  காற்றுப்பைகள் ,ஏபிஎஸ் , பிளைன்ட் ஸ்பாட் , க்ரூஸ் கன்ட்ரோல் ஹீல் அசிஸ்ட் உதவி ,இஎஸ்பி வசதிகளை கொண்டிருக்கும்.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி போட்டியாளர்கள்

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி காருக்கு கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டிள்ளது. குறிப்பாக ஃபார்ச்சூனர் , சான்டா ஃபீ , பஜீரோ ஸ்போர்ட் , ரெக்ஸ்டான் மற்றும் வரவிருக்கும் ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி போன்றவை ஆகும்.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி விலை

எதிர்பார்க்கப்பட்டும் தொடக்க விலை ரூ.20 லட்சம் முதல் 25 லட்சத்திற்க்குள்

வருகை — ஆகஸ்ட் இறுதியில்

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வெல்லுமா ?

மிக சவாலான சந்தையில் உள்ள எண்டெவர் வரவிருக்கும் மேம்படுத்தப்பட்ட ஃபார்ச்சூனர் மற்றும் ட்ரெயில் பிளேசர் எஸ்யூவி போட்டியை சந்திக்கும் என்பதால் விலை பெரிய காரணியாக இருந்து வெற்றியை தீர்மானிக்கும்….

New Ford Endeavour SUV launch this august in India.

Exit mobile version