Site icon Automobile Tamil

புதிய மகேந்திரா கேயூவி100 விரைவில் வருகை

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு வந்த மகேந்திரா கேயூவி100 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் முதல் சிறியரக மைக்ரோ எஸ்யூவி என்ற பெயருடன் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் மகேந்திரா நிறுவனத்தின் புதிய எம்ஃபால்கன் எஞ்சின் வரிசையை பெற்ற முதல் மாடலாக வந்த KUV100  மாடலில் 1.2 லிட்டர் ஜி80 பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டி75 டீசல் என இரு எஞ்சின்களுடன் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களை பெற்றுள்ளது.

புதிய மகேந்திரா KUV100

சில நாட்களுக்கு முன்னதாக விற்பனைக்கு வந்த இக்னிஸ் காரின் போட்டியை ஈடுகட்டும் நோக்கில் புதிய கேயூவி100 எஸ்யுவி காரின் பெட்ரோல் மாடல் அமோக வரவேற்பினை பெற்றிருந்தாலும் எரிபொருள் சிக்கனத்தில் எதிர்பாரத்த மைலேஜ் தருவதில் சிரமங்கள் உள்ளதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதற்கு ஏற்ப சிறப்பான சிக்கத்தை வழங்கும் வகையில் எஞ்சின் செயல்பாடு மற்றும் ஏசி போன்றவற்றின் செயல்பாட்டின் பொழுது மைலேஜ் அதிகமாக இழப்பதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேயூவி100 எஞ்சின்

82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100 காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

இரு வண்ண கலவை 

மேலும் போட்டியாளரான இக்னிஸ் காரில் அமைந்திருக்கும் இரு வண்ண கலவையை போல கேயூவி100 காரிலும் மேற்கூரை இரண்டுக்கு மேற்பட்ட வண்ணங்களில் கிடைக்கலாம். இந்த மாத இறுதியில் புதிய KUV100 எஸ்யூவி கார் விற்பனைக்கு வரலாம்.

Exit mobile version