புதிய ஹூண்டாய் எலன்ட்ரா படங்கள் வெளியானது

வரவிருக்கும் ஹூண்டாய் எலன்ட்ரா  காரின் படம் அறிமுகத்திற்க்கு முன்பாகவே இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஹூண்டாய் எலன்ட்ரா 2016ம் ஆண்டின் மத்தியில் இந்தியாவிற்க்கு வரலாம்.
ஹூண்டாய் எலன்ட்ரா
2016 ஹூண்டாய் எலன்ட்ரா 

புதிய எலன்ட்ரா காரின் தோற்றம் மற்றும் இன்டிரியர் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய என்ஜின் மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

ஹூண்டாய் நிறுவனத்தின் பாரம்பரியமான முகப்பு கிரிலில் மிக அகலமான ஏர் டேம் உள்ளது. செங்குத்தான பகல் நேர எல்இடி விளக்குகள் போன்றவற்றை பெற்று மிக சிறப்பான முகப்பினை கொண்டுள்ளது.

எலன்ட்ரா காரின் உட்புறத்தில் அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் மேலும் பல இடங்களில் சில்வர் மற்றும் குரோம் இன்ஷர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய எலன்ட்ரா காரில் 1.6 லிட்டர் T-GDI டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதன் ஆற்றல் 174பிஎச்பி ஆகும். இதில் 6 வேக  மெனுவல் அல்லது 7 வேக டபுள் கிளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம்.

அடுத்த ஆண்டின் மத்தியில் கொரியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எலன்ட்ரா அதனை தொடர்ந்து இந்தியாவுக்கு வரலாம்.

2016 Hyundai Elantra leaked pics
spysource

Exit mobile version