Site icon Automobile Tamilan

ப்யாகோ 150சிசி டைப்பூன் ஸ்கூட்டர்

 ப்யாகோ நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் சிறப்பாக முன்னேறி வருகின்றது. தன்னுடைய முன்னேற்றத்தை மேலும் வளப்படுத்த அடுத்த 150சிசி டைப்பூன் ஸ்கூட்டரினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
வெஸ்பா எல்ஸ் 125சிசி வரவேற்பினை தொடர்ந்து விரைவில் 150சிசி டைப்பூன் ஸ்கூட்டர் (MPFI-multi point fuel injection) பொருத்தப்பட்ட என்ஜின் ஆகும். இந்த ஸ்கூட்டர் வெளிவரும் பொழுது  150சிசி டைப்பூன் இந்தியாவின் முதல் MPFI ஸ்கூட்டராக இருக்கும்.
e27d8 typhoon150

டைப்பூன் ஸ்கூட்டர் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இதன் சக்தி 11.4HP @ 7750rpm மற்றும் டார்க் 11.5NM @ 6000rpm ஆகும். இதனுடைய எரிகிடங்கு அளவு 7 லிட்டர் ஆகும். முன்புறம் மற்றும் பின்புறங்களில் 200mm டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டிருக்கும்.அதிகப்பட்ச வேகம் 100km/h

இதுனுடைய விலை கூடுதலாக இருக்கும் என்பதால் விற்பனை பாதிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்பார்க்கப்படும் விலை 75,000 முதல் 90,000 வரை இருக்கலாம். வருகிற ஜூன் மாதத்தில் வரலாம்.

மைலேஜ் 32kmpl

ப்யாகோ நிறுவனத்தின் ப்ரான்ட்தான் வெஸ்பா..

Exit mobile version