Auto News

மஹிந்திரா அர்ஜூன் நோவா 4WD டிராக்டர் விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா டிராக்டர் பிரவு புதிய அர்ஜூன் நோவா 605 Di-l 4WD டிராக்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.  அர்ஜூன் நோவா 4WD  4 வீல் டிரைவ் ஆப்ஷனில் வந்துள்ளதால் எந்த மன்னிலும் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணிக்கும்.

புதிய அர்ஜூன் நோவா 4WD சென்னையில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்டரில் 4 வீல்களுக்கும் சரியான அளவில் ஆற்றல் செல்லும்.

57 குதிரைதிறன் ஆற்றலை வெளிப்படுத்தும் 3531சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் லிஃப்டிங் திறன் 2200கிலோ ஆகும். இந்த டிராக்டரின் வேகம் மணிக்கு 1.7கிமீ முதல் 33.5 கிமீ வரை ஆகும்.

பலவிதமான விவசாய பயன்பாடுகளுக்கு ஏற்ற அர்ஜூன் நோவா 4WD  டிராக்டரில் ஏசி ஆப்ஷனல் வேரியண்ட் உள்ளது. இதன் விலை ரூ. 10 லட்சம் ஆகும்.

அனைத்து விதமான மன்னிலும் எவ்வித சிரமும் இல்லாமல் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 4வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்றுள்ளது. 15 ஃபார்வேர்ட் மற்றும் 15 ரிவர்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது.

Mahindra Arjun NOVO 4WD tractor launched

Share
Published by
MR.Durai