Automobile Tamilan

மின்சார வாகனங்களுக்கு மஹிந்திரா எலக்ட்ரிக்

மஹிந்திரா குழுமத்தின் மின்சார வாகனங்களுக்கு மஹிந்திரா எலக்ட்ரிக் என்ற பெயரினை அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரேவா என்கின்ற பெயரினை முற்றிலும் மஹிந்திரா நீக்கியுள்ளது.

முந்தைய எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் வரவுள்ள எலக்ட்ரிக் வாகனங்கள் என அனைத்தும் மஹிந்திரா எலக்ட்ரிக் பிரிவுக்கு கீழ் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எலக்ட்ரிக் பிரிவில் e2O மற்றும் இ-வெரிட்டோ மாடல்கள் விற்பனையில் உள்ளது.  மேலும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இ-சுப்ரோ எலக்ட்ரிக் வேன் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

 

mahindra-electric-logo

1994 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் பெங்களூரைச் சேர்ந்த ரேவா நிறுவனத்தை 2010 ஆம் ஆண்டில் மஹிந்திரா குழுமம் கையகப்படுத்தியதை தொடர்ந்து e2O எலக்ட்ரிக் கார் வெளிவந்ததை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னதாக எலக்ட்ரிக் காராக வெரிட்டோ செடான் வெளிவந்தது. அதனை தொடர்ந்து சுப்ரோ வேன் எலக்ட்ரிக் பிரவில் வரவுள்ளது. இது தவிர e2O எலக்ட்ரிக் காரை 4கதவுகள் கொண்ட காராக வெளியிடுவதற்கான முயற்சியில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்களுக்கான பார்முலா இ பந்தயங்களிலும் பங்குபெற உள்ளது.

Exit mobile version