Categories: Auto News

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி சோதனை ஓட்டம்

மஹிந்திரா பொலிரோ காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் சோதனை ஓட்டத்தில் உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தோற்றத்தில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்றிருக்கலாம்.

New-20Bolero

இந்திய சந்தையின் முடிசூடா எஸ்யூவி கார்களின் ராஜாவாக விளங்கும் பொலிரோ காரரின் விற்பனை புதிய ரக எஸ்யூவி கார்களின் வரவால் சற்று விற்பனை எண்ணிக்கை குறைந்த பொழுதும்  என்றுமே இந்திய சந்தையின் சிறந்த எஸ்யூவி காராக விளங்கும்.

வெளியாகியுள்ள சோதனை ஓட்ட படத்தில் பின்புற தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மறைக்கப்பட்ட அம்சங்கள் மூலம் பின்புற பம்பர் , டெயில்கேட் லைட் பின்புற கைப்பிடிகள் போன்றவை புதுப்பிக்கப்பட்டிருக்கும். மேலும் முன்பக்கத்தில் மேம்படுத்தப்பட்ட முகப்பு பம்பரினை பெற்றிருக்கலாம்.  இன்டிரியரில் டேஸ்போர்டு மற்றும் இருக்கைகள் மேம்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் கூடுதலான வசதிகளை பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

வருகின்ற பண்டிகை காலத்திற்குமுன்னதாக புதிய மஹிந்திரா பொலிரோ கார் விற்பனைக்குஅறிமுகம் செய்யப்படலாம். விற்பனையில் உள்ள 2.5 லிட்டர் எம்ஹாக் m2DiCR டீசல் என்ஜினில் எந்த மாற்றங்களும் இருக்காது. இதன் ஆற்றல் 63 hp மற்றும் இழுவைதிறன் 180 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மஹிந்திரா நிறுவனம் குறைந்த விலையில் பொலிரோ காரினை வடிவமைக்க உள்ளது.

Pic Source – CarWale

Recent Posts

ஹூண்டாய் புதிய அல்கசாரின் ஸ்பை படங்கள் வெளியானது

க்ரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்ற ஆறு மற்றும் ஏழு இருக்கைகளை கொண்ட அல்கசார் எஸ்யூவி காரின் இறுதி…

9 mins ago

பஸால்டின் இன்டீரியர் டீசரை வெளியிட்ட சிட்ரன்

சிட்ரன் இந்தியாவின் C-Cube திட்டத்தின் கீழ் வெளியிட உள்ள 4வது மாடலான பஸால்ட் (Citroen Basalt) கூபே எஸ்யூவி ஆகஸ்ட்…

1 day ago

குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை உறுதி செய்த நிசான்

அடுத்த 2025-2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் உட்பட 4 கார்களை…

1 day ago

நிசான் X-Trail 2024 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ரூ.36 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற நிசானின் 2024 X-Trail எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள…

1 day ago

ஆகஸ்ட் 15., மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி அறிமுகமாகின்றது

சந்தையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரின் அடிப்படையில் தார் ராக்ஸ் (THAR ROXX) என்ற பெயரினை…

3 days ago

ஹீரோவின் சக்திவாய்ந்த எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் எப்பொழுது.?

இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த…

3 days ago