Automobile Tamilan

மஹிந்திரா மினிஸ்மார்ட் ஆப் அறிமுகம்

மஹிந்திரா மினிஸ்மார்ட் என்ற பெயரில் சிஸ்டம் மானிட்டரிங் அண்ட் ரிபோர்ட்டிங் டூல் ஆண்டராய்ட் அப்பளிகேஷனை மகிந்திரா & மகிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. மினிஸ்மார்ட் ஆப் மூலம் மஹிந்திரா கார்களின் மிக எளிமையாகவும் துல்லியமாகவும் பிரச்சனைகளை கண்டுபிடிக்க முடியும்.

Mahindra-Minismart-app.2

அதிகப்படியான நேரம் மற்றும் செலவு செய்து லேப்டாப் மற்றும் வயரிங் மூலம் தொடர்பு ஏற்படுத்தி வாகனங்களிடன் பிரச்சனை கண்டுப்பிடிப்பதற்கு மாற்றாக ஆண்டராய்ட் ஸ்மார்ட் மொபைல் வழியாக மிக விரைவாக அறிந்துகொள்ளும் வகையில் கிளவூட் நுட்பத்தின் வழியாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பூளூடூத் வழியாக வாகனத்தினை ஸ்மார்ட் போனில் உள்ள மினிஸ்மார்ட் அப்பளிகேஷன் வழியாக கிளயூட் அடிப்படையில் அனுமதி பெற்று உடனடியாக தீர்வினை பெற இயலும்.  இந்த அப்பளிகேஷனை டீலர்களில் டெக்னிஷியன் மற்றும் சூப்பர்வைசர்கள் மிக விரைவாகவும் சிறப்பாகவும் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

இந்த மினிஸ்மார்ட் செயலி (miniSMART- System Monitoring and Reporting Tool )மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான  சேவையை விரைவாகவும் துல்லியமாகவும் வழங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் வாடிக்கையார்கள் திருப்தியான அனுபவத்தினை பெற இயலும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து வாகனங்களுக்கும் அதாவது ரெக்ஸ்டான் உள்பட இந்த அப்பளிகேஷன் வழியாக பயன் பெற இயலும்.

Exit mobile version