Automobile Tamilan

மஹிந்திரா முன்பதிவு பணத்தை திருப்பி தருகின்றது

டெல்லி : தலைநகர் டெல்லியில் 2000சிசி க்கு மேற்பட்ட டீசல் என்ஜின்களை கொண்ட வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்ற தடை உத்தரவால் பெரும்பாலான எஸ்யூவி மற்றும் சொகுசு கார்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

mahindra scorpio front

மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த மாத விற்பனையில் 2 % பங்கினை டெல்லி கொண்டுள்ள சந்தையை மகிந்திரா இழந்துள்ளது. ஆனாலும் டியூவி300 , வெரிட்டோ வைப் , இ2ஓ மாடல்களை விற்பனை செய்ய முடியும்.

மேலும் வாசிக்க ; அதிரடி தீர்ப்பு ;  டெல்லியில் டீசல் கார் தடை

பிரசத்தி பெற்ற ஸ்கார்ப்பியோ ,எக்ஸ்யூவி500  பொலிரோ , சைலோ மற்றும் ரெக்ஸ்டான் மாடல்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு மஹிந்திரா தள்ளபட்டுள்ளது. புதிதாக விற்பனைக்கு வரவுள்ள கேயூவி100 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளதால் புதிய மாடல் டெல்லியில் விற்பனைக்கு செல்ல உள்ளது.

மேலும் மஹிந்திரா நிறுவனம் புதிய பெட்ரோல் என்ஜின்களை தயாரித்து வருவதனால் வரும் காலத்தில் எக்ஸ்யூவி500 , ஸ்கார்ப்பியோ மாடல்கள் பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு செல்லும்.

சைலோ , ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவி கார்களுக்கு முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு பணத்தினை திருப்பி தரவுள்ளது. மேலும் டெல்லி டீலர்களிடம் உள்ள ஸ்டாக் கார்களை மற்ற பகுதிக்கு எடுத்து செல்லவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது மேலும் மற்ற நிறுவனங்களும் இந்த நடவடிக்கையில் இறங்க உள்ளன.

 

 

Exit mobile version