மஹிந்திரா e2o பிளஸ் மின்சார கார் டீசர் வெளியானது

மஹிந்திரா இ2ஓ காரின் அடிப்படையில் 4 கதவுகளை கொண்டதாக உருவாகப்பட்டுள்ள மாடலுக்கு மஹிந்திரா e2o பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கூடுதல் இடவசதி , அதிக பேட்டரி திறன் மற்றும் வசதி கொண்டதாக மஹிந்திரா இ2ஓ பிளஸ் விளங்கும்.

மஹிந்திரா எலக்ட்ரிக் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள இ2ஓ ப்ளஸ் டீஸ் படத்தின் வாயிலாக பின்புற அமைப்பின் தோற்றம் தெளிவாகியுள்ளது.  வெளியாகியுள்ள படதின் வாயிலாக செங்குத்தான எல்இடி டெயில் விளக்குகள் , நம்பர் பிளேட் இடவசதி சற்று மேலே நகர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி எவ்விதமான விபரங்களும் வெளியிடப்படாமல் உள்ளது.

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள e2O பிளஸ் கார் விற்பனையில் உள்ள இ2ஓ மாடலை விட கூடுதலான நீளத்துடன் ,மஹிந்திராவின் பாரம்பரிய கிரிலை முகப்பில் பெற்று மிக நேர்த்தியான கூடுதல் இடவசதியுடன் பல நவீன வசதிகளை பெற்றிருக்கலாம். மேலும் கூடுதலான பேட்டரி ரேஞ்ச் வெளிப்படுத்தக்கூடியதாக ,மிக வேகமான சார்ஜிங் முறை போன்றவற்றை பெற்றதாக விளங்கும்.

மஹிந்திரா எலக்ட்ரிக் பிரிவின் சார்பாக e2O , இவெரிட்டோ, இசுப்ரோ போன்ற மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் விற்பனையில் உள்ள நிலையில் கூடுதலாக e2O பிளஸ் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Exit mobile version