Site icon Automobile Tamilan

மாரடைப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் கார்கள்..! : மோட்டார் டெக்

வாகன ஓட்டிகளுக்கு மாரடைப்பு வருவதனையே முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கையை எழுப்பும் வகையிலான நுட்பத்தை ஆய்வாளர்கள் உருவாக்கி வருகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு இதுபோன்ற சிரமங்கள் ஏற்படும் சமயத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தவிரக்கவே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மோட்டார் டெக்

பயணங்களின் போது வாகன ஓட்டிகளுக்கு மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை வாகனங்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு மாரடைப்பு வருவதனை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கும் கருவியை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆய்வாளர் கயவன் நஜரியன் இது பற்றி கூறுகையில் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் இதயம் சார்ந்த பிரச்சனைகளான கார்டியோ வாஸ்குலர் , மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆய்வாளர்கள் மற்றும் டொயோட்டா கார் நிறுவனமும் இணைந்த வாகன ஓட்டிகளின் திறனை கண்கானித்து அதற்கு ஏற்ப செயல்படும் வகையிலான நுட்படத்தினை செயல்படுத்தும் நோக்கில் தங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருவதனால் அடுத்த சில ஆண்டுகளுக்குள் கார்களே மாரடைப்பு அறிகுறிகளை கண்டறிந்து எச்சரிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

Exit mobile version