மாருதி இக்னிஸ் வருகையில் தாமதம் ?

வருகின்ற பண்டிகை காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸூகி இக்னிஸ் கார் வருகையில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் வரவேற்பே இதற்கு காரணமாகும்.

இடி ஆட்டோ வெளியிட்டுள்ள  தகவலில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் சுசூகி பலேனோ கார்கள்  இரண்டுமே ஒரு இலட்சம் முன்பதிவுகளை கடந்துள்ள நிலையில் குர்கான் மற்றும் மானசேர் மாருதி சுசூகி ஆலைகள் முழுமையான உற்பத்தி எட்டியிருந்தாலும் காத்திருப்பு காலம் 6 முதல் 9 மாதங்கள் வரை அதிகரித்துள்ளதால் இக்னிஸ் காரை தாமதப்படுத்த வாயப்புள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா

காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விட்டாரா பிரெஸ்ஸா பெரும்பாலான காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. இளம் வாடிக்கையாளர்கள் மற்றும் எஸ்யூவி பிரியர்களின் ஏற்ற மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா விளங்குகின்றது.

1.3 லிட்டர் மல்டிஜெட் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 89 bhp மற்றும் இழுவைதிறன் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மைலேஜ் லிட்டருக்கு 24.3 கிமீ ஆகும்.

ஹூண்டாய் க்ரெட்டா , ஈக்கோஸ்போர்ட் , டியூவி300 போன்ற எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

மாருதி பலேனோ

மாருதி சுசூகி பலேனோ காரில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 21.4 கிமீ மற்றும் பலேனோ டீசல் மைலேஜ் லிட்டருக்கு 27.49 கிமீ ஆகும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 , ஹோண்டா ஜாஸ் போன்ற கார்களுடன் சந்தையை பகிர்ந்துகொண்டுள்ளது.

மிகுந்த எதிர்ப்புகுள்ளாக உள்ள மாருதி இக்னிஸ் இந்த வருடத்தின் இறுதிக்குள் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version