மாருதி எஸ் கிராஸ் எஸ்யுவி விபரம்

மாருதி சுசூகி எஸ் கிராஸ் எஸ்யுவி கார் என்ஜின் , மைலேஜ் மற்றும் வேரியண்ட் விபரம் வெளிவந்துள்ளது. S கிராஸ் எஸ்யுவி இரண்டு விதமான டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் வருகின்றது.
மாருதி எஸ் கிராஸ் எஸ்யுவி

மாருதி எஸ் கிராஸ் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் என இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் விற்பனைக்கு வரவுள்ளது. பெட்ரோல் மாடல் , ஆட்டோமெட்டிக் மற்றும் ஆல் வீல் டிரைவ் போன்றவை இந்திய சந்தையில் தாமதமாக விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது.

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்களை எஸ் கிராஸ் காரில் பயன்படுத்த உள்ளனர்.
DDiS 200 என்ற பெயரில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் 89பிஎச்பி ஆற்றல் மற்றும் 200என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

DDiS 320 என்ற பெயரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 118பிஎச்பி ஆற்றல் மற்றும் 320என்எம் டார்க்கையும் தரவல்லது. 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி எஸ் கிராஸ் 1.3 லிட்டர் டீசல்  என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.65கிமீ மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 22.7கிமீ ஆகும்

மாருதி சுசூகி LDi, VDi மற்றும் ZDi என்ற வேரியண்ட் பெயர்களுக்கு பதிலாக சிக்மா , சிக்மா(O) , டெல்டா , ஜெட்டா மற்றும் ஆல்ஃபா என்ற வேரியண்ட் பெயர்கள் பயன்படுத்த உள்ளனர்.

அனைத்து வேரியண்டிலும் 1.3 லிட்டர் DDiS 200 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.  மற்ற மூன்று வேரியண்ட்களான டெல்டா , ஜெட்டா மற்றும் ஆல்ஃபா போன்றவற்றில் 1.6 லிட்டர் DDiS 320 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். ஆக மொத்தம் 8 வேரியண்டில் எஸ் கிராஸ் கிடைக்கும்.

மாருதி எஸ் கிராஸ் எஸ்யுவி காரில் ஏபிஎஸ் மற்றும் முன்பக்க இரட்டை காற்றப்பைகள் சிக்மா வேரியண்டை தவிர்த்து மற்ற 7 வேரியண்டிலும் இருக்கும். மேலும் டாப் வேரியண்டில் கீலெஸ் நுழைவு , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா , பகல் நேர எல்இடி விளக்குகள் , தொடுதிரை , க்ரூஸ் கட்டுப்பாடு போன்றவை இருக்கும்.

மாருதி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180மிமீ ஆக இருக்கும். இதன் பூட் கொள்ளளவு 353 லிட்டர் ஆகவும் பின் இருக்கைகளை மடக்கினால் 810 லிட்டர் வரை கிடைக்கும்.

மாருதி எஸ் கிராஸ் எஸ்யுவி காரின் போட்டியாளர்கள் வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா , டஸ்ட்டர் , டெரானோ போன்றவைகளாகும். இந்த மாதத்தின் இறுதியில் S கிராஸ் விற்பனைக்கு வரும்.

Maruti S-Cross Engine , variants details and pics

Exit mobile version