Automobile Tamilan

மாருதி எஸ் க்ராஸ் 1.6l பேஸ் வேரியன்ட்கள் நீக்கம்

மாருதி சுசூகி எஸ் க்ராஸ் காரின் 1.6 லிட்டர் எஞ்சின் வரிசையில் இருந்த ஜெட்டா மற்றும் டெல்டா வேரியன்ட்கள் நீக்கப்பட்டுள்ளன. டாப் வேரியன்டான ஆல்ஃபா மட்டுமே விற்பனைக்கு  கிடைக்க உள்ளது.

கடந்த 2015யில் விற்பனைக்கு வந்த எஸ் கிராஸ் பெரிதாக வெற்றி பெறாமல் போனாலும் நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இருவிதமான டீசல் எஞ்சின் ஆப்ஷனுடன் வந்த எஸ் க்ராஸ் மொத்தம் சிக்மா , டெல்டா,ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்டில் கிடைத்து வருகின்றது.

மாருதி எஸ் க்ராஸ்

DDiS 200 மாடலில்  சிக்மா , டெல்டா,ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களும் , DDiS 320யில்ஆல்பா மட்டுமே இனி கிடைக்கும்.

DDiS 200 என்ற பெயரில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் 89பிஎச்பி ஆற்றல் மற்றும் 200என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
DDiS 320 என்ற பெயரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 118பிஎச்பி ஆற்றல் மற்றும் 320என்எம் டார்க்கையும் தரவல்லது. 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி எஸ் கிராஸ் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.65கிமீ மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 22.7கிமீ ஆகும்.

எஸ் க்ராஸ் விலை விபரம்

DDiS 200 சிக்மா – ரூ. 8.52 லட்சம்

DDiS 200 டெல்டா- ரூ. 9.25 லட்சம்

DDiS 200 ஜெட்டா – ரூ. 9.92 லட்சம்

DDiS 200 ஆல்பா – ரூ. 11.13 லட்சம்

DDiS 320 ஆல்பா –  ரூ. 12.55 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் சென்னை )

Exit mobile version