Automobile Tamil

மாருதி சியாஸ் SHVS ஹைபிரிட் விளக்கம்

வரும் 1ந் தேதி மாருதி சுசூகி சியாஸ் SHVS மினி ஹைபிரிட் செடான் கார்  விற்பனைக்கு வரவுள்ளது. புதிய மாருதி சியாஸ் டீசல் ஹைபிரிட் காரின் மைலேஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாருதி சியாஸ்
மாருதி சியாஸ் 

சியாஸ் எஸ்எச்விஎஸ் ( SHVS- Smart Hybrid Vehicle by Suzuki ) நுட்பத்தின் நோக்கம் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கவும் ஆற்றல் வீன்போவதனை தடுக்கும் நோக்கில் இந்த மினி ஹைபிரிட் அமைப்பு செயல்படும்.

மஹிந்திரா மாடல்களில் உள்ள மைக்ரோ ஹைபிரிட் போன்றதுதான் இந்த சியாஸ் ஹைபிரிட் அமைப்பும். வரவிருக்கும் சியாஸ் காரின் தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இல்லை . பின்புறம் SHVS பேட்ஜ் பதிக்கப்பட்டுள்ளது. உட்புறத்திலும் எந்த மாற்றங்களும் கிடையாது. மேலும் கூடுதலாக SHVS இன்டிகேட்டரை மட்டும் பெற்றுள்ளது.

சியாஸ் SHVS ஹைபிரிட் விளக்கம்

சுசூகி நிறுவனத்தின் சியாஸ் SHVS ஹைபிரிட் நுட்பத்தினை மாருதி இன்ட்கிரேட்டடு ஸ்டார்டர் ஜெனரேட்டர் ( IGS-Integrated Starter Generator )என அழைக்கின்றது.

இந்த ஹைபிரிட் நுட்பமானது வாகனத்தை ஐடிலில் நிற்கும் பொழுது அதாவது ஆக்சிலரேட்டர் பெடலில் இருந்து காலை எடுத்தால் தானாகவே மூன்று அல்லது 4 விநாடிகளில் என்ஜின் அனைந்துவிடும். திரும்ப கிளட்ச் மேல் கால் வைத்தால் தானாகவே என்ஜின் செயல்பட தொடங்கும்.

மேலும் ஓட்டுநர்  இருக்கை பட்டை தளர்த்தப்பட்டாலோ அல்லது ஓட்டுநர் பக்க கதவு திறந்தாலோ தானாகவே SHVS நுட்பம் அனைந்துவிடும்.

SHVS நுட்பத்தில் அடுத்து ஆற்றலை திரும்ப பயன்படுத்தி கொள்ள உதவும் அமைப்பான Deceleration Energy Regenerating உள்ளது. இதன் மூலம் ஆற்றலை சேமித்து சிறப்பான எரிபொருள் சிக்கனத்திற்க்கு வழி வகுக்கும்.  30 கிமீ வேகத்திற்க்கு மேல் இருந்து குறைய தொடங்கும் பொழுது இந்த அமைப்பு செயல்பட்டு ஆற்றலை சேமிக்கின்றது.

மேலும் என்ஜின் பவர் அசிஸ்ட் அமைப்பின் மூலம் என்ஜின் ஆற்றலை ஒழுங்கப்படுத்த மோட்டாரும் இயங்குகின்றது. கியர்ஷிஃப்ட் இன்டிகேட்டர் அமைப்பும் உள்ளது. மேலும் ஐடில் நேரத்தில் கியர் ஷிஃப்ட் செய்வதற்க்கான பரிந்துரை செய்கின்ற அமைப்பு உள்ளது.

மாருதி சியாஸ் SHVS ஹைபிரிட் காரில் முந்தைய 89பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டடுள்ளது.

சியாஸ் ஹைபிரிட் டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 28கிமீ ஆகும். முந்தைய மைலேஜ் லிட்டருக்கு 26கிமீ ஆகும்.

மாருதி சியாஸ் SHVS ஹைபிரிட்  விலை சாதரன மாடலை விட ரூ12,000 முதல் 15000 வரை கூடுதலாக இருக்கும்.

Maruti Suzuki Ciaz SHVS to be launch on Sep 1

Exit mobile version