Automobile Tamilan

மாருதி சுசுகி டிசையர் காரின் சாதனை துளிகள்

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் முன்னணி மாடல்களில் ஒன்றாகவும் , இந்தியாவின் முதன்மையான செடான் காராக வலம் வருகின்ற மாருதி டிசையர் காரின் மூன்றம் தலைமுறை மாடல் நாளை விற்பனைக்கு வரவுள்ளது.

மாருதி சுசுகி டிசையர்

கடந்த 9 வருடங்களாக இந்திய சந்தையில் மிக சிறப்பான மாடல்களில் ஒன்றாக விளங்குகின்ற மாருதி டிசையர் காரின் வரலாற்றில் தடம் பதித்த சில முத்தான சாதனைகளை பற்றி அறிந்து கொள்ளலாம். ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்ட செடான் ரக மாடலாக டிசையர் விளங்குகின்றது.

1. 2008 ஆம் ஆண்டு மாரச் மாதம் இந்திய சந்தையில் முதன்முறையாக மாருதியின் ஸ்விஃப்ட் டிசையர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டது.

2. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த டிசையர் காரின் தோற்றத்தை பார்த்தால் தெரியும் அதனுடைய டிக்கி பூட் அமைப்பு வித்தியாசமாக காட்சியளித்தது. ஆனாலும் விற்பனையில் தனது ஆட்டத்தை தொடங்கியது.

3. அறிமுகம் செய்த 19 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக செப்டம்பர் 2009ல் ஸ்விஃப்ட் டிசையர் 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்தது.அதன் பிறகு ஒரே வருடத்தில் அதாவது செப்டம்பர் 2010ல்  அடுத்த ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து சந்தையில் வேகமெடுக்க தொடங்கியது.

4. தொடர்ந்து சந்தையில் நம்பகமான மாடலாக விளங்கி வந்த டிசையர் காரில் மேம்படுத்தப்பட்ட மற்றும் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை பெற்ற மாடலாக 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாவது தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் பெட்ரோல் வேரியன்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டது.

5. இரண்டாவது தலைமுறை மாடல் வருகைக்கு பின்னர் 11 மாதங்களிலே அதாவது ஜனவரி 2013ல் 5 லட்சம் என்ற விற்பனை இலக்கை கடந்தது. அதனை தொடர்ந்து ஒரே வருடத்தில்  அதாவது ஜனவரி 2014ல் 7 லட்சம் , வருடத்திற்கு 2 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்தத்து.

6. ஜனவரி 2015 ஆம் வருடத்திற்க்குள் மேலும் 2 லட்சம் வாகனங்கள் என தொடர்ந்த பயணத்தில் மாபெரும் சாதனையாக 2015 ஆம் வருடம் ஜூன் மாதம் 10 லட்சம் என்ற விற்பனை இலக்கை அறிமுகம் செய்த 7 வருடங்களில் கடந்தது.

7.  தொடர்ந்து சந்தையில் முன்னணி செடானாக வலம் வருகின்ற டிசையர் காரில் டிசையர் டூர் என டாக்சி பயன்பாட்டுக்கும், டீசல் மாடலில் ஏஜிஎஸ் என அழைக்கப்படும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஜனவரி 2016ல் சேர்க்கப்பட்டது.

8. இந்திய மட்டுமல்லாமல் வருடத்திற்கு 50,000 கார்களுக்கு அதிகமாக ஆசியா, ஆப்பரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

9. இந்தியாவின் முதன்மையான செடான் ரக மாடலாக விளங்கும் டிசையர் கார் மாதந்திர விற்பனையில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடிக்க தவறியதே இல்லை.

10. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்டு முற்றிலும் மேம்படுத்தப்பட்ட  மூன்றாவது தலைமுறை மாடல் நாளை இந்திய வாகன சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

 

Exit mobile version