Automobile Tamil

மாருதி நெக்ஸா வழியாக 1 லட்சம் கார்கள் விற்பனை

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பிரிமியம் கார்களுக்கான நெக்ஸா டீசலர்கள் வாயிலாக கடந்த ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கார்களை மாருதி சுஸூகி விற்பனை செய்துள்ளது. எஸ்-க்ராஸ் மற்றும் பலேனோ கார்கள் நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்படுகின்றது.

NEXA-first-anniversary

பிரிமியம் ரக சந்தையில் தன்னுடைய ஆதிக்கத்தை  அதிகரிக்கும் நோக்கில் வெளிவந்த மாருதி நெக்ஸா டீலர்கள் ஜூலை 2015யில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஒரு வருட காலத்தில் இரு மாடல்களை விற்பனை செய்து ஒரு லட்சம் கார்களை 94 நகரங்களில் உள்ள 150 நெக்ஸா சேவை மையங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 2015யில் 100 டீலர்களுடன் தொடங்கப்பட்டு தற்பொழுது 150 டீலர்களாக விரிவடைந்துள்ள நிலையில் அடுத்த மார்ச் 2017க்குள் 250 டீலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. நெக்ஸா டீலர்களின் வாயிலாக மாருதி கார் வாங்கியவர்களில் 51 % வாடிக்கையாளர்கள் மாருதி நிறுவனத்துக்கு புதியவர்களாகும்.

விற்பனை செய்யப்பட்டுள்ள 1,00,025 யூனிட்களில் பலேனோ காரின் பங்கு மட்டுமே 71,230 ஆகும். எஸ-க்ராஸ் காரின் பங்கு  28,795 ஆகும். அடுத்த சில மாதங்களில் மாருதி பலேனோ ஆர்எஸ் மற்றும் இக்னிஸ் கார் விற்பனை தீபாவளி பண்டிகையின் பொழுது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலேனோ மற்றும் விட்டரா பிரெஸ்ஸா வரவேற்பினால் தற்பொழுது தாமதமாக வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version