மாருதி பலேனோ 100 நாடுகளுக்கு ஏற்றுமதி

இந்திய மாருதி பலேனோ கார் 100 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. மாருதி பலேனோ மாடல் குளோபல் மாடல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி பலேனோ

ரூ.4.99 லட்ச தொடக்க விலையில் விற்பனைக்கு வந்த பலேனோ மிகுந்த சவாலினை தன் போட்டியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேக் இன் இந்தியா மாடலாக விளங்கும் பலேனோ ஐரோப்பா , லத்தின் அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

முதற்கட்டமாக 5000 முதல் 6000 மாடல்களும் அடுத்த வருடத்திலிருந்து மாதம் 55,000 மாடல்களையும் ஏற்றுமதி செய்ய உள்ளனர். வெளிநாடுகளில் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு டீசல் ஆப்ஷனில் விற்பனைக்கு செல்கின்றது. மேலும் சிவிடி ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் ஆப்ஷனில் கிடைக்கும்.

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அறிமுக விலையில் பலேனோ கார் வந்துள்ளதால் மிக விரைவில் விலை உயர்வினை மாருதி பலேனோ சந்திக்க உள்ளதாக தெரிகின்றது.

மேலும் படிக்க ; பலேனோ காரின் சிறப்புகள்

ஹோண்டா ஜாஸ் , எலைட் ஐ20 , போலோ போன்ற கார்களுக்கு கடுமையான நெருக்கட்டியை மாருதி பலேனோ தந்துள்ளது.

Exit mobile version