Automobile Tamilan

மாருதி 800 சாதனையை வீழ்த்திய மாருதி ஆல்ட்டோ

இந்தியாவின் ஆட்டோமொபைல் அடையாளங்களில் ஒன்றான மாருதி 800 காரின் சாதனையை மாருதி ஆல்ட்டோ வரிசை கார்கள் வீழ்த்தியுள்ளது. 30 ஆண்டுகால மாருதி 800 சாதனையை 15 ஆண்டுகளில் ஆல்ட்டோ முறியடித்துள்ளது.
மாருதி 800

1983 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த மாருதி 800 கார் குறைவான விலை கொண்ட சிறப்பான மாடலாக கடந்த 30 வருடங்களில் அதாவது ஜனவரி 2014 வரை 28 லட்சம் கார்கள் விற்பனை ஆகியது.

2000ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த அக்டோபர் 2015யில் 29,19,819 ஆல்ட்டோ வரிசை கார்களை விற்பனை செய்துள்ளது.

மாருதி 800

மாருதி 800 காரில் 45 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 57என்எம் டார்க் வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. 4 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் சிறப்பு பதிப்புகளில் வந்தது.
2014ம் ஆண்டு வரை விற்பனையிலிருந்த மாருதி 800 கடுமையான மாசு வெளியிட்டால் முழுதாக விற்பனை நிறுத்தப்பட்டது.
மாருதி 800 முதல் உரிமையாளர் ஹர்பால் சிங் மற்றும் அவர் துணைவியார்
1980 தொடங்கி 2000ம் வரை வளர்ந்த மிகப்பெரிய பிரபலங்களின் முதல் காராக அமைந்த பெருமை மாருதி 800 காருக்கு உள்ளது. முதல் மாருதி 800 காரை வாங்கியவர் ஹர்பால் சிங் ஆவார். இவர் 1983ம் ஆண்டில் ரூ.47,500 விலையில் வாங்கினார்.
விற்பனைக்கு வந்தபொழுது எண்ணற்ற முன்பதிவுகள் நடந்திருந்தாலும் குலுக்கல் முறையில் ஹார்பால் சிங் தேர்ந்தேடுக்கப்பட்டார். இவர் இந்தியன் ஏர்லைன்ஸ் பணியாளர் ஆவார்.
முதல் காரின் சாவியை மறைந்த முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி வழங்கினார். 2010ம் ஆண்டு ஹர்பால் சிங் மறைவிற்க்கு பின்னர் இந்த கார் பராமரிப்பில்லாமல் நிறுத்தப்பட்டது.

மாருதி ஆல்ட்டோ 800

2000ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த மாருதி ஆல்ட்டோ கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து 800 காரின் இடத்தினை சரியாக நிரப்பியது எனலாம்.

ஆல்ட்டோ கே10

1 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட கூடுதல் ஆற்றலை வழங்கும் கே10 2014ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தது. ஆல்ட்டோ கே10 காரில் மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனும் உள்ளது.
மாருதி 800 : இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் மாருதி 800 காருக்கு என்றுமே தனித்துவமான பெருமையுடன் நிலைத்திருக்கும்.

Exit mobile version