Auto News

முதல் புகாட்டி வேரான் சூப்பர் கார் ஏலம்

Spread the love

உலகின் மிக வேகமான கார் என்ற பெருமைக்குரிய புகாட்டி வேரான் காரின் முதல் கார் ஏலத்திற்க்கு வருகின்றது. முதல் புகாட்டி வெய்ரான் கார் வெறும் 1229கிமீ மட்டுமே ஓடியுள்ளது.
புகாட்டி வெய்ரான்

கடந்த 2006ம் ஆண்டு விற்பனைக்கு வந்த முதல் புகாட்டி வெய்ரான் சூப்பர் கார் ஆர்எம் சொதேபி மாண்டெர்ரி வழியாக வரும் ஆகஸ்ட் 13ந் தேதி ஏலத்திற்க்கு வருகின்றது.

001 அடிசட்ட எண்ணை கொண்ட இந்த புகாட்டி வெய்ரான் வெறும் 1229கிமீ மட்டுமே இயங்கியுள்ளது. இரட்டை வண்ண கலர் கொண்ட இந்த காரின் உட்புறம் பீஜ் வண்ணத்தில் இருக்கும்.

987எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த W16 சிலிண்டர் கொண்ட 8.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

புகாட்டி வெய்ரான் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 407கிமீ ஆகும். 

10 வருட பழைய புகாட்டி வெய்ரான் ரூ.11 கோடி முதல் 15.50 கோடிக்குள் ஏலம் போகும் என தெரிகின்றது.

World First Bugatti Veyron going up for auction


Spread the love
Share
Published by
MR.Durai