Automobile Tamilan

மைலேஜ் மன்னன்..! மாருதி செலிரியோ டீசல்

மைலேஜ் கார்களில் மன்னனாக  மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் உற்பத்தி தொடங்கியுள்ளது.
மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ காரின் பெட்ரோல் மாடல் மட்டும் விற்பனையில் உள்ள நிலையில் டீசல் மாடலின் உற்பத்தியை மாருதி சுசூகி மானசேர் ஆலையில் தொடங்கப்பட்டுள்ளது. அறிமுகம் செய்த தேதி முதல் விற்பனையில் மிக பெரும் எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வரும் செலிரியோ காரின் டீசல் மாடலும் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகின்றது.

செலிரியோ பெட்ரோல் மாடலில் ஆட்டோமெட்டட் மெனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் மிகுந்த வரவேற்பினை பெற்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் டீசல் மாடலில் ஏஎம்டி தாமாதாகவே விற்பனைக்கு வருமாம்.

பெட்ரோல் செலிரியோ காருக்கும் டீசலுக்கு எந்த மாற்றங்களும் இல்லை மாருதி செலிரியோ டீசல் மாடலில் 42 முதல் 48எச்பிக்குள் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் 793சிசி இரண்டு சிலிண்டர் கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 130 முதல் 140என்எம்க்குள் இருக்கும்.

மாருதி செலிரியோ டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 30.1 கிமீ இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மிகவும் சவாலான விலையில் விற்பனை செய்யப்படும் செலிரியோ காரில் ஏபிஎஸ் , இரட்டை காற்றுப்பைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை உயர்ரக வகையில் கிடைக்கும்.

செலிரியோ டீசல் மாடல் விற்பனைக்கு வரும்போது இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக விளங்கும். மாருதி செலிரியோ காரினை டாக்சி சந்தையிலும் களமிறக்க மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளதாம்.

Exit mobile version