Automobile Tamilan

ரூ.10 லட்சத்திற்க்குள் தானியங்கி கார் வாங்கலாமா ? (Updated)

இந்தியாவில் உள்ள அனைத்து வாகன தயாரிப்பாளர்களுமே தானியங்கி கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளனர். ரூ.10 லட்சம் விலையில்  ஹேட்ச்பேக் ஏஎம்டி அல்லது ஆட்டோமெட்டிக் கார் வாங்கலாமா ?

1. டாடா நானோ

உலகின் மிக மலிவான விலையில் விற்பனைக்கு வந்த டாடா நானோ காரின் ஜென்எக்ஸ் நானோ என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட மாடலை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த ஜென்எக்ஸ் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

நானோ ஏஎம்டி கார் வாங்கலாமா

நானோ மிக சிறிய காராக விளங்குவதனால் எளிதாக நெரிசல் மிகுந்த சாலையில் பயணிக்க முடியும். மேலும் ஏஎம்டி கியர்பாக்ஸூடன் கிடைப்பதனால் ஓட்டுவதற்க்கு நன்றாக இருக்கும்.

டாடா நானோ ஜென்எக்ஸ்

38பிஎஸ் ஆற்றலை தரும் 624சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி மைலேஜ் லிட்டருக்கு 21.9கிமீ ஆகும்.

டாடா நானோ ஜென்எக்ஸ் விலை

நானோ GenX XMA — ரூ.2.81 லட்சம்

நானோ GenX XTA — ரூ.2.99 லட்சம்

2. மாருதி ஆல்டோ K10

மாருதி சுசூகி ஆல்டோ K10 AGS  வேரியண்ட் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றது . இந்தியளவில் மிகவும் பிரசித்தமாக உள்ள இந்த மாடல் உள்ளுக்குள் சிறப்பான இடவசதியுடன் விளங்குகின்றது.

 68பிஎஸ் ஆற்றலை தரும்  பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆல்டோ K10 மைலேஜ் லிட்டருக்கு 24.07கிமீ ஆகும்.

 மாருதி ஆல்டோ K10 விலை

ஆல்டோ K10 AGS ரூ. 4.14 லட்சம்

3. மாருதி செலிரியோ

மாருதி நிறுவனத்தின் மற்றொரு மாடலான செலிரியோ இந்தியாவில் முதன் முறையாக ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வந்த மாடலாகும். இந்திய சந்தையில் அறிமுகம் செய்ததில் இருந்து நல்ல விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது.

67பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.0 லிட்டர் K10 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி செலிரியோ மைலேஜ் லிட்டருக்கு 23.01 கிமீ ஆகும். 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி செலிரியோ கார் விலை

செலிரியோ LXi – 4.52 லட்சம்

செலிரியோ VXi – 4.78 லட்சம்

4. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் i10 கார் மிக சிறப்பான வடிவமைப்பினை கொண்ட காராகும். மிக அதிகப்படியான இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ஐ10 காரில் 83பிஎஸ் ஆற்றலை தரும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 வேக ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.

ஹூண்டாய் கிராண்ட் i10 விலை

கிராண்ட் i10 — ரூ.6.40 லட்சம்

5. மஹிந்திரா ரேவா e2o

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டும் ஒரே எலக்ட்ரிக் காரான ரேவா e2o மிக சிறப்பான வசதிகள் கொண்ட எலக்ட்ரிக் காராக விளங்குகின்றது.  ஓருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120கிமீ வரை பயணிக்க முடியும்.

மஹிந்திரா ரேவா e2o விலை

ரேவா e2o விலை ரூ.6.24 முதல் 6.89 வரை (ex-showroom Bengaluru )

6. ஹோண்டா பிரியோ

பிரியோ ஆட்டோமெட்டிக் கார் 5 வேக தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றது. இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவத்தினை கொண்டுள்ள பிரியோ 1.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிரியோ கார் விலை ரூ.6.44 லட்சம்

7. நிசான் மைக்ரா சிவிடி

மைக்ரா காரில் 5வேக சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். இந்த காரில் 77பிஎஸ் ஆற்றலை தரும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

நிசான் மைக்ரா சிவிடி விலை ரூ. 6.92 லட்சம்.

8. ஹோண்டா ஜாஸ் சிவிடி


ஜாஸ் காரில் 90பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 100என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி தானியங்கி கியர்பாக்சிலும் கிடைக்கும்.
சிவிடி விலை விபரம் ஜாஸ் S – ரூ. 6,99,000 , ஜாஸ் V – ரூ. 7,85,000


9. ஃபோக்ஸ்வாகன் போலோ TSI

போலோ ஹேட்ச்பேக் காரில் 105பிஎஸ் ஆற்றலை தரும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டடுள்ளது. போலோ TSI காரில் 7 வேக DSG  தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் பிரிமியம் ஹேட்ச்பேக் காரான போலோவில் இரண்டு காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக உள்ளது.

 ஃபோக்ஸ்வாகன் போலோ TSI விலை ரூ.8.63 லட்சம்.

ஏஎம்டி மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷனில் உள்ள ஹேட்ச்பேக் கார்களை மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் மிக சிறப்பான வசதிகளுடன் பிரிமியம் ஹேட்ச்பேக் காராக போலோ விளங்குகின்றது.

(all prices ex-showroom Chennai)

 படிக்க ஏஎம்டி என்றால் என்ன

A list of automatic Hatchback cars in India under 10 lakhs.

Exit mobile version