Automobile Tamilan

ரோல்ஸ் ராய்ஸ் டான் கார் இந்தியாவில் ஜூன் 24 முதல்

கடந்த வருடத்தில் நடைபெற்ற பிராங்பேர்ட் மோட்டார் ஷோவின் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் கார் இந்திய சந்தையில் ஜூன் 24 முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Rolls-Royce-dawn

டான் சொகுசு காரின் தோற்றம் ரயீத் போன்றே அமைந்திருந்தாலும் பல மாறுதல்களை பெற்றுள்ளது. குறிப்பாக காரின் முகப்பு விளக்கு எல்இடி அம்சங்களுடன் விளங்குகின்றது. முகப்பு விளக்கில் RR என ரோல்ஸ்ராய்ஸ் லோகோ எல்இடி கொண்டு மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளனர்.
 ஸ்ஃபாட் டாப் கூரையானது மிக இயல்பாக மடங்கி விரியும் வகையில் அமைந்துள்ளது. பக்கவாட்டில் உள்ள 21 இஞ்ச் பாலீஷ்  வீல் மற்றும் 20  , 21இஞ்ச் என இரண்டு அளவுகளிலும் பெயின்ட் செய்யப்பட்ட வீல்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கிடைக்கும்.
ரயீத் காரை அடிப்படையாக கொண்ட டான் காரில் 563bhp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த V12 சிலிண்டரை கொண்ட 6.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 780என்எம் ஆகும்.  ரயீத் காரில் உள்ளது போலவே ZF- 8 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கியர்பாக்ஸ் செயல்பாடானது ஜிபிஎஸ் உதவியுடன் சாலை ஸ்கேன் செய்து அதற்கேற்ப தானாகவே கியர்களை மாற்றி கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகும்.
 ரோல்ஸ் ராய்ஸ் டான் கார் உச்ச வேகம் மணிக்கு 250கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது . 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு வெறும் 4.9 விநாடிகள் மட்டுமே எடுத்து கொள்ளும்.
1949 ஆண்டு உருவாக்கப்பட்ட சில்வர் டான் என்ற ரோல்ஸ்ராய்ஸ் காரின் பெயரையே கொண்டுள்ள புதிய டான் காரில் மனதை கொள்ளை கொள்ளும் மிக ரம்மியமான உட்புற தோற்றத்தினை பெற்ற மாடலாக விளங்குகின்றது.
Exit mobile version