வால்வோ ஐஷர் (VECV) வர்த்தக வாகனங்களின் பேருந்துகள் மற்றும டிரக்குகளுக்கு ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை விலை குறைய உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய ஜிஎஸ்டி 2.0 விதிகளின் படி வர்த்தக வாகனங்களுக்கு 18 % ஆக மாற்றப்பட்டுள்ளது, முன்பாக 28% வரி விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடதக்கதாகும்.
Product | Reduction in MRP (₹) |
---|---|
LMD Trucks | From ₹1.0 Lakh To ₹2.0 Lakhs |
HD Trucks | From ₹1.5 Lakhs To ₹6.0 Lakhs |
Buses | From ₹1.1 Lakhs To ₹3.4 Lakhs |
டீசல், சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி வாகன வரம்புகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்சார லாரிகள் மற்றும் பேருந்துகள் மீதான 5% ஜிஎஸ்டி விகிதம் மாறாமல் உள்ளது.