அடுத்த தலைமுறை ஸ்கேனியா டிரக் வரிசை அறிமுகம்

வர்த்தக வாகனங்களை தயாரிப்பதில் பிரசத்தி பெற்று விளங்கும் ஸ்விடன் நாட்டின் ஸ்கேனியா நிறுவனம் அடுத்த தலைமுறை ஸ்கேனியா டிரக் வரிசையை சுமார் ரூ.16,000 கோடி (SEK 20 billion) முதலீட்டில் வடிவமைத்துள்ளது.

Right (scania S) Left (Scania R)

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்படும் ஸ்கேனியா நிறுவனம் 125 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்டுள்ளது. சர்வதேச அளவில் 100க்கு மேற்பட்ட நாடுகளில் 1700க்கு மேற்பட்ட டீலர்களை கொண்டு டிரக் சேவையில் சிறந்து விளங்கும் நிறுவனமாகும்.

அடுத்த தலைமுறை ஸ்கேனியா டிரக் வரிசை மிகச்சிறப்பான செயல்திறன் , யூனிக் மாடுலர் , வாடிக்கையாளர்கள் தேவையை சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையிலும் , சரக்கு போக்குவரத்து துறையில் சிறப்பான பங்களிப்பினை வழங்கும் வகையில் நிலையான வருமானத்தை பெற்று தரும் என ஸ்கேனியா தெரிவித்துள்ளது.

ஸ்கேனியா வரலாற்றில் முதன்முறையாக மிகப்பெரிய முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வரிசை டிரக்குகள் , 10 ஆண்டுகளாக 4000 பணியாளர்களின் கூட்டுமுயற்சியில் ஸ்விடன் நாட்டில் அமைந்துள்ள சோடர்டால்யா ஸ்கேனியா தொழில்நுட்ப மையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பணியாற்றும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 18,000 ஆகும்.  புதிய வரிசை டிரக்குகளை 10 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு மேல் சோதனை செய்யப்பட்டு கூடுதலாக 40,000 வாடிக்கையாளர்கள் ஸ்கேனியா தொழில்நுட்ப மையத்துக்கு அழைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால உழைப்பின் பலனாக புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்கேனியா S டிரக் வரிசை மற்றும் ஸ்கேனியா R டிரக் வரிசைகளில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் 5 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வெளிப்படுத்தும் மாடல்களாக விளங்கும்.

410hp முதல் 730hp வரையிலான ஆற்றலில் இடம்பெற்றுள்ள ஸ்கேனியா டிரக் வரிசைகளில் எஸ் வரிசை ட்ரெயிலர் மற்றும் கனரக போக்குவரத்து வாகனமாகவும் ஆர் வரிசை டாங்கர் லாரியாகவும் செயல்படும் வகையில் வரவுள்ளது. சர்வதேச அளவில் 5 கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

சமீபத்தில் ஸ்கேனியா லாரி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ரோல்ஓவர் சைட் கர்டெயின் ஏர்பேக்கினை புதிய ஸ்கேனியா லாரிகள் பெற்றிருக்கும்.

புதிய ஸ்கேனியா லாரி படங்கள்

Exit mobile version