ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியா வருகை விபரம்

இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனம் புதிதாக ஸ்கோடா கோடியாக் என்ற பெயரிலான எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதி செய்துள்ளள நிலையில் டீலர்கள் வாயிலாக ரூபாய் 50 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஸ்கோடா கோடியாக்

மிக கடுமையான சவால் நிறைந்த பிரிமியம் எஸ்யூவி சந்தை பிரிவில் களமிறங்க உள்ள கோடியாக் எஸ்யூவி காரின் போட்டியாளர்கள் ஃபார்ச்சூனர், எண்டேவர் , பஜெரோ ஸ்போர்ட் , ரெக்ஸ்டான் மேலும் வரவுள்ள டிகுவான் மற்றும் இசுசூ MU-X போன்ற மாடல்களுக்கு சவாலாக விளங்க உள்ளது.

கோடியாக் காரின் அளவுகள் 4,697 மில்லிமீட்டர் நீளமும், 1,882 மில்லிமீட்டர் அகலமும், 1,676 மில்லிமீட்டர் உயரமும் ,  2,791 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. மேலும் இதன் கிரவுண்ட் கிளியரண்ஸ் 190 மில்லிமீட்டர் மற்றும் 300 மில்லிமீட்டர் உயரம் வரை உள்ள நீரான இடங்களில் பயணிக்க ஏதுவாக இருக்கும்.

மிக நேர்த்தியான  முப்பரிமான ரேடியேட்டர் கிரில் , அழகான ஹெட்லைட் விளக்குகளுடன் கூடிய பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் மற்றும் எல்இடி பனி விளக்குகள் என அனைத்து விளக்குகளும் எல்இடியை பெற்றுள்ளது. எல்இடி டெயில் விளக்குகள் , 20 இன்ச் அலாய் வீல் , நேர்த்தியான பக்கவாட்டு புராஃபைல் கோடுகள் என மிக நேர்த்தியான அமைந்துள்ளது.

டேஸ்போர்டு  சிறப்பான ஃபீனிஷ் செய்யப்பட்டு சென்ட்ரல் கன்சோலில் ஸ்கோடா கனெக்ட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஸ்கோடா கனெக்ட் டெக்னாலஜி வாயிலாக வை-ஃபை , கூகுள் எர்த் , 360 டிகிரி கேமரா , ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆப்பிள் கார்பிளே , எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் அழைப்புகள் , ஆம்பியன்ட் லைட்டிங் போன்வற்றை பெற்றுள்ளது.

கோடியாக் எஞ்சின்

இந்த எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் டிஎஸ்ஐ இஞ்ஜின் 180hp பவரை வெளிப்படுத்தும் மற்றும் 2.0 லிட்டர் TDI டீசல் இஞ்ஜின் 190hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் நிலையில் விற்பனைக்கு கிடைகும்

அனைத்து கோடியாக் எஞ்சின்களிலும் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீட் DSG ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும். மேலும் பேஸ் வேரியண்ட் மாடலை தவிர மற்றவற்றில் ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

தற்பொழுது டீலர்கள் வாயிலாக ரூபாய் 50,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளிவரவுள்ள கோடியாக விலை ரூ. 27 லட்சத்தில் தொடங்கலாம்.

Exit mobile version