ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் மார்ச் 17 முதல்

ஹூண்டாய்  ஐ20 ஆக்டிவ் கிராஸ்ஓவர் கார் வரும் 17ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் ஐ20 ஆக்டிவ் படங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் வெளிவந்துள்ளது.
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்

எலைட் ஐ20 ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் வெளிதோற்றம் மற்றும் உட்கட்டமைப்பில் சில மாற்றங்களை பெற்று கிராஸ்ஓவர் காராக ஐ20 ஆக்டிவ் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் எலைட் ஐ20 என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஆற்றலை சற்று கூடுதலாக வழங்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கும்.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும். எலைட் ஐ20 காரை விட ஆற்றலை சற்று கூடுதலாக வழங்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கும். மைலேஜ் குறைவதற்க்கான வாய்ப்பு உள்ளது. தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலும் கிடைக்க பெறலாம்.

கவர்ச்சியான தோற்றத்தினை பெற்றுள்ள ஐ20 ஆக்டிவ் புதிய புராஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேர எல்இடி விளக்குகள், வட்ட வடிவ பனி விளக்குகள், முன் மற்றும் பின்புறத்தில் அழகான தோற்றத்தினை தரக்கூடிய பம்பர்கள், 16 இஞ்ச் ஆலாய் வீல் , மேற்கூரை ரெயில்கள், பாடி கிளாடிங் போன்றவை முக்கிய வெளிப்புற மாற்றங்களாகும்.

உட்ப்புறத்தில் ஆக்வா நீளம் மற்றும் கருமை வண்ண உட்ப்புறம் மேலும் ஆரஞ்ச் மற்றும் கருமை வண்ண உட்டப்புறம் என இரண்டு விதமான வகைகளில் கிடைக்கும்.

கிராஸ்ஓவர் மாடல் என்பதால் கிரவுன்ட் கிளியரன்ஸ் ஐ20 காரை விட கூடுதலாக இருக்கும் அதாவது 190மிமீ கிளியரன்ஸ் கொண்டிருக்கும்.

வரும் மார்ச் 17ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யபட உள்ளது. எலைட் ஐ20 காரை விட ரூ.50000 – 70000 வரை விலை கூடுதலாக இருக்கலாம்.

Exit mobile version