Site icon Automobile Tamilan

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நாளை முதல்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10  ஹேட்ச்பேக் கார் நாளை விற்பனைக்கு வரவுள்ள நிலையில் கிராண்ட் ஐ10 காரின் பல விவரங்கள் வெளிவந்துள்ளன. சிறிய கார்களின் மத்தியில் கடும் போட்டியை கிராண்ட் ஐ10 ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 5 விதமான மாறுபட்டவைகளல் கிடைக்கும். அவை எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா ஆப்ஷனல் போன்றவைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. மிகவும் நேர்த்தியான ஃபூளூடியக் டிசைன் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள கிராண்ட் ஐ10 மாபெரும் வரவேற்பினை பெறும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

தற்பொழுதுள்ள ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையில் உருவாக்கப்பட்டுள்ள கிராண்ட் ஐ10 3765மிமீ நீளமும், 1660மிமீ அகலமும் மற்றும் 1520மிமீ உயரத்தினை கொண்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 83பிஎஸ் மற்றும் டார்க் 114என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

புதிய 1.1 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 70பிஎஸ் மற்றும் டார்க் 180என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பைகள் டாப் வேரியண்டில் மட்டுமே உள்ளது. ஆலாய் வீல் போன்ற அம்சங்கள் டாப் வேரியண்டில் மட்டுமே உள்ளதாக தெரிகின்றது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெட்ரோல் லிட்டருக்கு 19கிமீ மைலேஜ் தரலாம். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 டீசல்  லிட்டருக்கு 23கிமீ மைலேஜ் தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ரூ4.50 லட்சத்தில் தொடங்கலாம்….

பெட்ரோல் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இனையத்தில் தற்பொழுது வெளியாகியுள்ள பிரவுச்சரில் மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே உள்ளதாக தெரிகின்றது.

Exit mobile version