ஹூண்டாய் i20 , i20 ஏக்டிவ் , வெர்னா கார்களில் ஏர்பேக் நிரந்தரம்

பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஹூண்டாய் i20 , i20 ஏக்டிவ் மற்றும் வெர்னா  கார்களில் ஏர்பேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலீட் i20 மற்றும் ஹூண்டாய் i20 ஏக்டிவ் க்ராஸ்ஓவர் காரிலும் அனைத்து வேரியண்ட்களிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் மற்றும் இபிடி ஆப்ஷன்கள் ERA மற்றும் மெக்னா வேரியண்டில் இல்லை. மேலும் i20 sportz (O) வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20 ஏக்டிவ்

i20 Asta (o) வேரியண்டில் புதிதாக புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகள்  , பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , 7 இன்ச் ஆடியோ வீடியோ நேவிகேஷன் அமைப்பு , 16 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல் போன்றவை நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மாடல்கள் முதல் இந்த வசதிகளை எலீட் ஐ20 , ஐ20 ஏக்டிவ் கார்கள் பெற்றிருக்கும். பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவில் 50 % பங்களிப்பினை கொண்டுள்ள ஹூண்டாய் i20 காரின் போட்டியாளர்களான ஜாஸ் மற்றும் பலேனோ கார்களில் காற்றுப்பை , ஏபிஎஸ் போன்றவை நிரந்தரமாக உள்ளது.

ஹூண்டாய் வெர்னா

வெர்னா 4S காரின் அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.  மேலும் S(O)  வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பேஸ் , S , SX மற்றும் SX(O) என 4 வேரியண்டில் கிடைக்கும். வெர்னா காரின் பேஸ் வேரியண்டில் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா

S , SX மற்றும் SX(O) வேரியண்ட்களில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள SX(O) வேரியண்டில்  6 காற்றுப்பைகள்,  4 வீல்களிலும் டிஸ்க் பிரேக் , இருக்கைகள், ஸ்டீயரிங் வீல், கியர் நாப் மற்றும் ஆர்ம் ரெஸ்ட் போன்றவற்றில் லெதர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டார்ட் பொத்தான் , தானியங்கி வைப்பர் , அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங், க்ரோம் கைப்பிடிகள் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பிடித்துள்ளன. மேலும் ஆட்டோமேட்டிக் கியர்  வேரியண்ட் டீசலில் மட்டுமே கிடைக்கும்.

சிட்டி . சியாஸ் மற்றும் வென்ட்டோ கார்களுடன் வெர்னா சந்தையை பகிர்ந்து கொள்கின்றது. இவை அனைத்தும் 2016ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யும் மாடல்களில் மட்டுமே வரவுள்ளது.

Share