ஹூண்டாய் i20 N ஸ்போர்ட் அறிமுகம்

ஹூண்டாய் ஐ20 காரின் ஸ்போர்ட்டிவ் மாடலாக i20 N ஸ்போர்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளனர். ஹூண்டாய் ஐ20 என் ஸ்போர்ட் காரில் 114பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தியுள்ளனர்.
ஹூண்டாய் i20 N ஸ்போர்ட்
 Hyundai i20 N Sport

பெர்ஃபாமென்ஸ் ரக கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஹூண்டாய் N என்ற பெயரில் புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது.  ஹூண்டாய் என் ஸ்போர்ட்டிவ் பிராண்டில் ஐ20 கார் வெளிவந்துள்ளது.

ஸ்போர்ட்டிவ் ஐ20 என் மாடலின் தோற்றத்தில் ஸ்போர்ட்டிவ் கிட்களை பொருத்தி புதிய பொலிவினை பெற்றுள்ளது. மேலும் 17 இஞ்ச் ஆலாய் வீல் பம்பர் டிரிம் , சைட் ஸ்கிர்ட்ஸ் மற்றும் பாடி கிளாடிங் ,  ரியர் பூட் ஸ்பாயல்ர் , புகைப்போக்கில் ஸ்டீல் மற்றும் பின்புறத்தில் N பேட்ஜ் போன்றவை பெற்றுள்ளது.

உட்புறத்தில் என்விஹெச் லேவல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் டாக்கிங் இன்டகிரேஷன் , யூஎஸ்பி , ஆக்ஸ் இன் தொடர்பு , பூளூடூத் இணைப்பு போன்றவற்றை பெற்றுள்ளது.

114பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 160என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

முன்புறத்தில் வென்டிலேட்ட டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் சாலிட் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பைகள் பொருத்தியுள்ளனர்.

ஹூண்டாய் ஐ20 என் ஸ்போர்ட்

குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள  ஹூண்டாய் i20 N ஸ்போர்ட் முதற்கட்டமாக தென் ஆப்பரிக்காவில் விற்பனைக்கு சென்றுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பதற்க்கு உறுதியான தகவல் இல்லை. விற்பனைக்கு வந்தால் ரூ.12 லட்சத்தில் வரலாம்.

Hyundai i20 N Sport revealed

Exit mobile version