• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் அறிமுகம்

by MR.Durai
4 August 2015, 4:21 pm
in Auto News
0
ShareTweetSend
ரெவ்ஃபெஸ்ட் விழாவில் ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் இன்று அறிமுகம் செயப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CB ஹார்னட் 160R பைக்கினை யூனிகார்ன் 160 பைக்கிற்க்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ளது.

ஹோண்டா சிபி ஹார்னட் 160R
ஹோண்டா சிபி ஹார்னட் 160R

சிபி யூனிகார்ன் 160 பைக்கிற்க்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள புதிய  ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக்கில் யூனிகார்ன் என்ஜினே பொருத்தப்பட்டிருக்கும்.

250சிசி முதல் 900சிசி வரை உள்ள பைக் மாடல்களுக்கு மட்டுமே ஹார்னட் பிராண்ட் பெயரை ஹோண்டா பயன்படுத்தி வந்தது.

ஹார்னட் 160ஆர் பைக்கில் 14.5 பிஎச்பி ஆற்றலை தரவல்ல 162.71சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருகும். இதன் முறுக்குவிசை 14.61என்எம் ஆகும்.

ஸ்போர்ட்டிவ் தோற்றத்தில் விளங்கும் சிபி ஹார்னட் 160R பைக்கில் முன் மற்றும் பின்பக்கங்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் உள்ளது.

இரட்டை வண்ணங்களில் காட்சி படுத்தப்பட்டுள்ள ஹார்னட் 160ஆர் ஒற்றை வண்ணத்திலும் கிடைக்கலாம்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் மோனோஸ்பிரிங் சாக் அப்சார்களை பெற்றுள்ளது.

சிபி யூனிகார்னை 160 பைக்கை விட ரூ 4000 முதல் 5000 வரை விலை கூடுதலாக இருக்கலாம்.

யமஹா FZ-S வெர்சன் 2.0 , ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் , டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 , மற்றும் சூசுகி ஜிக்ஸெர் போன்ற பைக்குகளுக்கு புதிய ஹோண்டா சிபி ஹார்னட் 160R போட்டியாக விளங்கும்.

விலை மற்றும் வருகை 

புதிய ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் விலை ரூ.85,000 இருக்கலாம் மேலும் வரும் தீபாவளி பண்டிகையின் பொழுது விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது.

New Honda CB Hornet 160R Unveiled

Tags: Honda Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version