ஹோண்டா ஜாஸ் மைலேஜ் விவரம் – Report

ஹோண்டா ஜாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வரும் ஜூலை 8ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஹோண்டா ஜாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு வருகின்றது.

ஹோண்டா ஜாஸ் 

ஜாஸ் காருக்கு ரூ.51,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். புதிய ஜாஸ் கார் மிகவும் சிறப்பான இடவசதி மற்றும் சிறப்பான மைலேஜ் வழங்கும் காராக விளங்கும்.

ஹோண்டா ஜாஸ் என்ஜின்

ஜாஸ் காரில் 90பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 100என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி தானியங்கி கியர்பாக்சிலும் கிடைக்கும்.

ஹோண்டா ஜாஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19கிமீ ஆகும்.

ஜாஸ் டீசல் காரில்  100பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 200என்எம் ஆகும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.

ஹோண்டா ஜாஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.3கிமீ ஆகும்.

இதன் மூலம் ஜாஸ் கார் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் இரண்டாவது கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. முதலிடத்தில் உள்ள கார் அறிய படிக்க
அதிக மைலேஜ் தரும் கார் க்ளிக் பன்னுங்க..

All new Honda Jazz engine and mileage details

Share