Site icon Automobile Tamilan

ஹோண்டா பிஆர் வி எஸ்யூவி காரின் விபரம்

ஹோண்டா பிஆர் வி காம்பேக்ட் ரக எஸ்யூவி கார் இந்தியாவில் ஏப்ரல் 2016ம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.  ஹோண்டா பிஆர் வி எஸ்யூவி  பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வரவுள்ளது.

இந்தோனேசியா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வந்த பிஆர் வி எஸ்யூவி கார் இந்தோனேசியா சந்தையில் சிறப்பான தொடக்கத்தினை பெற்றுள்ளது. இந்தியாவில் வரும் 2016ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

பிஆர் வி எஸ்யூவி காரில் ஹோண்டாவின் புதிய 1.6 லிட்டர்  டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 160பிஎஸ் மற்றும் டார்க் 320என்எம் ஆகும். இதே என்ஜின் சில மாற்றங்களுடன் இந்தியாவிற்க்கு வரும். பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

தபுகெரா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ள பிஆர் வி எஸ்யூவி வருடத்திற்க்கு 36,000 கார்களை தயாரிக்க உள்ளது. இதே ஆலையில் ஜாஸ் , அமேஸ் , சிட்டி மற்றும் மொபிலியோ போன்ற மாடல்களும் தயாரிக்கப்படுகின்றன. தற்பொழுது தபுகெரா ஆலையின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டிற்க்கு 1.2 லட்சம் கார்களாகும். முழுசெயல்திறனை இந்த ஆலை எட்டும்பொழுது ஆண்டிற்க்கு 1.8 லட்சம் கார்களை தயாரிக்க இயலும்.

0d885 honda brv suv

மஹிந்திரா எக்ஸ்யூவி500 , க்ரெட்டா , டஸ்ட்டர் , ஈக்கோஸ்போர்ட் மற்றும்  டெரானோ போன்ற எஸ்யூவிகளுக்கு போட்டியாக வரவுள்ளது. ஹோண்டா பிஆர் வி எஸ்யூவி விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சத்தில் இருக்கும்.

Honda BR-V compact SUV to launch in India April 2016

Exit mobile version