Automobile Tamilan

ஃபோர்டு மஸ்டாங் காரின் மிக மோசமான தர மதிப்பீடு – கிராஷ் டெஸ்ட்

கடந்த 2008 முதல் யூரோ கிராஷ் டெஸ்ட் சோதனைகளில் சிறப்பான தர மதிப்பீட்டை பெற்று வரும் ஃபோர்டு கார்களுக்கு தற்பொழுது மிகப்பெரிய தர இழப்பீட்டை மஸில் மஸ்டாங் கார் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மஸில் ரக மாடலாக விளங்கும் ஃபோர்டு மஸ்டாங் முதன்முறையாக வலது பக்க ஸ்டீயரிங் வீல் பெற்று அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்திய சந்தையிலும் ரூ.65 லட்சத்தில் மஸ்டாங் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

யூரோ என்சிஏபி

அமெரிக்காவின் கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மிதப்பீட்டை பெற்றுள்ள மஸ்டாங் ஐரோப்பியா கிராஷ் டெஸ்ட் ஆய்வில் வெறும் 2 நட்சத்திரத்தை மட்டுமே பெற்றுள்ளது. இது குறித்து யூரோ என்சிஏபி வெளியிட்டுள்ள சோதனை முடிவுகளில் முன்பக்க மோதலின் பொழுது மணிக்கு 64 கிமீ வேகத்தில் மோதிய பொழுது  முன்பக்கத்தில் அமைந்திருக்கும் இரண்டு காற்றுப்பைகளும் போதுமான அளவு விரிவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான டம்மிகளை வைத்து ஆய்வு முடிவுகளின் படி மிக அதிகப்படியான சேதராம் வயறு மற்றும் முக்கிய உடற்பாகங்களில் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாலே இரண்டு நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

மேலும் பக்கவாட்டு சோதனையில் 10 வயது மதிக்கதக்க சிறுவனக்கான டம்மியை வைத்து சோதனை செய்தபொழுது கர்டெயின் காற்றுப்பையும் போதுமான பாதுகாப்பினை வழங்கவில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது ஃபோர்டு நிறுவனத்தின் பாரம்பரிய முத்திரை பதித்த மஸ்டாங் காருக்கு ஐரோப்பா சந்தையில் கிடைத்துள்ள மிகப்பெரிய மோசமான தர மதிப்பாகும்.

youtubelink- https://youtu.be/F0StTHnTKK8

Exit mobile version