Site icon Automobile Tamilan

அசோக் லேலண்ட் இலகுரக வாகனங்கள்

அசோக் லேலண்ட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி கனரக வாகன தயாரிப்பாளாராக விளங்கி வருகின்றது. இலகுரக வாகன தயாரிப்பிலும் நிசான் நிறுவனத்துடன் இனைந்து தோஸ்த் வாகனத்தினை விற்பனை செய்து வருகின்றது.

நிசான் எவாலியா காரினை சில மாற்றங்களுடன் லேலண்ட் ஸ்டைல் எம்பிவியாக இந்த வருடத்தின் இறுதிக்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எவாலியா தனிநபர் பயன்பாட்டிற்க்கும் விற்பனையில் உள்ளது. ஆனால் ஸ்டைல் தனிநபர் பயன்பாட்டிற்க்காக விற்க்கப்படாது. அதாவது டாக்ஸி, கொரியர் சேவைகள் இன்னும் பிற வர்த்தக தேவைகளுக்கு பயன்படும் வகையில் விற்பனை செய்யப்படும்.

Ashok Leyland Launch Stile

இதனால் ஸ்டைல்  வாகனத்தில் பல சொகுசு வசதிகள் இடம்பெறாது. அதற்க்கு மாற்றாக சிறப்பான இடவசதியுடன் விளங்கும்.  இதனால் வர்த்தக பயன்பாட்டிற்க்காக ஸ்டைல் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அசோக் லேலண்ட் தோஸ்த் இலகுரக டிரக்கினை பயணிகள் பயன்பாட்டிற்க்கு பயன்படும் வாகனமாகவும் களமிறக்கக உள்ளதாம். 13 நபர்கள் பயணிக்கும்படி தோஸ்த் விற்பனைக்கு வரலாம்.

நிசான்-அசோக் லேலண்ட் கூட்டணியில் சுமார் ரூ 2300 கோடி முதலீட்டில் இலகுரக வர்த்தக வாகனங்களுக்காகவே தனியான ஆலையினை உருவாக்கி வருகின்றது. இந்த ஆலை 2015 ஆம் ஆண்டில் செயல்பட துவங்கலாம். இந்த ஆலை பயன்பாட்டிற்க்கு வரும்பொழுது இலகுரக வாகன தயாரிப்பில் நிசான்-அசோக் லேலண்ட் முன்னணியாக விளங்கும்.

Exit mobile version