Site icon Automobile Tamilan

இந்தியாவில் தினமும் 53,700 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றது

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 53,700 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்ற நிலையில் இதில் 75 சதவீத பங்களிப்பினை இருசக்கர வாகனங்கள் பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1.96 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டில் வாகனங்கள் பதிவு செய்யும் வருடாந்திர எண்ணிக்கை 10 லட்சத்துக்கு குறைவாக இருந்த நிலையில் சீரான வளர்ச்சியை 2010 ஆம் ஆண்டு வரை பதிவு செய்து வந்த நிலையில் கடந்த 2014ஆம் வருடத்தில் மட்டும் மாபெரும் வளர்ச்சியாக 1.94 கோடி வாகனங்கள் பதிவு ஆகியது. அதனை தொடரந்து கடந்த 2015 ஆம் வருடத்தில் 1.96 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு ஒரு நாளில் சாராசரியாக 53,720 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாகனங்கள் உள்ள மாநிலம்

2015யில் அதிகபட்ச வாகனங்களை பதிவு செய்வதில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 24.38 லட்சம் வாகனங்களும் , மஹாராஷ்டிரா மாநிலத்தில் 19.91 லட்சம் வாகனங்களும் , மூன்றாவது இடத்தில் கர்நாடக மாநிலத்தில் 15.15 லட்சம் வாகனங்களும் , டெல்லியில் 6.27 லட்சம் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் பதிவு  செய்யப்பட்டுள்ள வாகனங்களில் இருசக்கர வாகனங்களின் பங்களிப்பு மட்டும் 75 சதவீதம் பெற்றுள்ளது. அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் மிக சிறப்பாக இருசக்கர வாகனங்கள் அமைந்திருப்பது மற்றும் பொது போக்குவரத்து கட்டணத்தை விட கிலோமீட்டர் கட்டணம் குறைவாக இருப்பதே வளர்ச்சிக்கு காரணம் என போக்குவரத்து அமைச்சரகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக வேகமாக வளர்ந்து வரும் தனிநபர் வாகன எண்ணிக்கையை கட்டுப்படுத்த தவறினால் எதிர்காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பொது மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை அதிகரித்து சிறப்பான முறையில் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் தனிநபர்கள் வாகனத்தை கட்டுப்படுத்த இயலும் , அவ்வாறு கட்டுப்படுத்த தவறும்பொழுது 18.64 கோடியாக உள்ள வாகன எண்ணிக்கை அடுத்த 20-30 ஆண்டுகளில் 35 கோடியை தாண்டும் வாய்ப்புகள் உருவாகும்.  மொத்த நாட்டின் வாகன எண்ணிக்கையில் தலைநகர் டெல்லியில் மட்டும் 8  சதவீத வாகனங்கள் அதாவது 80 லட்சம் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கும் நிலையில் தனிநபர் வாகனத்தை கட்டுப்படுத்த தவறினால்  இந்த எண்ணிக்கை இருமடங்கு உயரும் என நகர்ப்புற போக்குவரத்து நிபுணர் ரங்கநாதன் தெரிவிக்கின்றார்.

இந்தியாவில் தனிநபர் வாகனத்துக்கு உள்ளதை போல பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்து சாதனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாகன கடன் மற்றும் சாலை வரி போன்றவற்றில் மாற்றும் கொண்டு வரவேண்டும் என ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இதை படிங்க ;  90 சதவீத இந்தியர்களிடம் வாகனங்களே இல்லை

Exit mobile version