Site icon Automobile Tamilan

உலகின் முதல் தானியங்கி டாக்சி சேவை நூடானமி ஆரம்பம் : சிங்கப்பூர்

எதிர்கால ஆட்டோமொபைல் உலகினை தீர்மானிக்கும் தானியங்கி கார்களுக்கு முன்னோட்டாமாக உலகின் முதல் தானியங்கி டாக்சி சேவையை சிங்கப்பூரில் நூடானமி (nuTonomy) நிறுவனம் தொடங்கியுள்ளது.

கூகுள் , வால்வோ , ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து சோதனை ஓட்டத்தில் தானியங்கி கார்களை ஈடுபடுத்தி வரும்நிலையில் சிங்கப்பூரில் செயல்படும் நூடோனமை ஸ்டார்ட்அப் நிறுவனம் முதல் சேவையை 6 கார்களுடன் தொடங்கியுள்ளது. ஆனால் டிரைவர் இருக்கை ஓட்டுநர் ஒருவர் வாகனத்தின் செயல்பாடுகளை கண்கானித்தபடி உள்ளார்.

சோதனை ஓட்ட அடிப்படையில் தானியங்கி கார் டாக்சி சேவை தொடங்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6 கார்கள் அறிமுகம் செய்யபட்டுள்ள நிலையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் 12 கார்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் தானியங்கி டாக்சி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக நூடானமி தெரிவித்துள்ளது.

குறிப்பிட இடங்களில் மட்டும் அதாவது 2.4 சதுர மைல் (4 sq km) தொலைவுக்கும் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த சேவையில் பிக்அப் மற்றும் டிராப் சேவைகளை நூடானமி ஆப்ஸ் வழியாக இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ரெனோ ஜோ மற்றும் மிட்சுபிஷி i-MiEV என இரு எலக்ட்ரிக் கார்களை 6 செட் Lidar கருவிகள் காரின் மேற்பகுதியில் ஒன்று சுற்றிகொண்டே இருக்கும் இவைகள் சாலையை ரேடார் மற்றும் லேசார் போன்ற கருவிகளுடன் செயல்படுகின்றது. இரண்டு கேமரா டேஸ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கின்றது. கேமராக்களின் வாயிலாக ரோடு சிக்னல்கள் பெற்றுக்கொள்ளும்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நூடானமி ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கிய மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்களாக படித்த லாக்னேமா மற்றும் எமிலியோ ஃபரெசோலி என்கின்ற இருவரால் தொடங்கப்பட்டு  மசாசூசெட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தங்களின் நிறுவனங்களை பெற்றுள்ளனர். விரைவில் அமெரிக்கா , ஐரோப்பா ஆசியாவில் சில நாடுகளில் இதுபோன்ற தானியங்கி டாக்சி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

உபேர் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியில் இதுபோன்ற சேவையை வழங்க உள்ளது.

அனைத்து பேஸ்புக் நண்பர்களுக்கும் நன்றி ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் பேஸ்புக் பக்கம் 10,000 விருப்பங்களை கடந்துள்ளது. நீங்களும் விரும்ப www.facebook.com/automobiletamilan

Exit mobile version