20 நிமிட சார்ஜ் 600 கிமீ பயணிக்க ஏற்ற சாம்சங் எலக்ட்ரிக் கார் பேட்டரி அறிமுகம்

வெறும் 20 நிமிடம் பேட்டரி சார்ஜ் செய்தால் 600 கிமீ தொலைவு பயணிக்கும் வகையிலான சாம்சங் எலக்ட்ரிக் கார் பேட்டரிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

ஆட்டோமொபைல் உலகில் மாற்று எரிபொருளுக்கான தேடலில் எலக்ட்ரிக் கார்கள் முக்கிய இடத்தினை பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் முன்னனி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் முதல் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை எலக்ட்ரிக் கார்களுக்கான பவர்டெரியன் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.அந்த வரிசையல் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை வெளியிட்டுள்ளது.

சாம்சங் பேட்டரி

மிக அதிக தொலைவு பயணிக்கு வகையிலான பேட்டரிகளை உற்பத்தி செய்வதே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு மத்தியில் சாம்சங் நிறுவனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் வகையிலான பேட்டரியை காட்சிப்படுத்தியுள்ளது. மேலும் சாம்சங் தெரிவித்துள்ள மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் வெறும் 20 நிமிடங்களில் 80 சதவீத பேட்டரி சார்ஜ் ஏறிவிடும் என உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்காக $357 மில்லியன் முதலீட்டில் ஹங்கேரி நாட்டில் பிரத்யேக பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையில் 2020 ம் ஆண்டு முதல் ஆண்டிற்கு 50,000 எலக்ட்ரிக் கார்களுக்கு பேட்டரி தயாரிக்கும் திறனை பெற்றதாக விளங்கும். சாம்சங் பேட்டரிகளை பிஎம்டபிள்யூ , ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும்.