Site icon Automobile Tamilan

செவர்லே என்ஜாய் இன்று அறிமுகம்

செவர்லே என்ஜாய் எம்பிவி இன்று விற்பனைக்கு வருகின்றது. செவ்ர்லே நிறுவனத்தின் முதல் எம்பிவி காராகும். ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை விலையில் இருக்கலாம்.
மாருதி எர்டிகா, இன்னோவா, சைலோ, எவாலியா போன்ற எம்யூவி கார்களுக்கு சவாலாக செவர்லே என்ஜாய் விளங்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
டாப் வேரியண்ட் எல்டிஇசட்டில் ஏபிஎஸ், காற்றுபைகள், பவர் ஸ்டீயரிங் போன்ற  வசதிகள் இருக்கும்.
7 மற்றும் 8 நபர்கள் என இரண்டு விதமான இருக்கை வசதிகளில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப தேர்ந்தேடுக்கலாம். 7 இருக்கைகள் கொண்ட என்ஜாய் தனிநபர் பயன்பாட்டிற்க்கு ஏற்றதாகவும், 8 இருக்கைகள் கொண்ட என்ஜாய் டாக்ஸி பயன்பாட்டிற்க்கு பொருந்தும்.
செவர்லே என்ஜாய்
செவர்லே என்ஜாய் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 77.5 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 188 என்எம் ஆகும்.
செவர்லே என்ஜாய் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 104 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 131 என்எம் ஆகும்.
டாக்ஸி மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பினை பெறும் முழுமையான விவரங்கள் அறிமுகத்திற்க்கு பின் வெளிவரும் காத்திருங்கள்………..
Exit mobile version