Automobile Tamilan

வந்தாச்சு..! இலவச வைஃபை தமிழக அரசுப்பேருந்திலும்

அரசுப் பேருந்தும் நவீன தலைமுறைக்கு ஏற்ற பேருந்துகள் என நிரூபிக்கும் வகையில் தமிழக அரசின் நெல்லை மண்டல அரசுப் பேருந்தில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

தமிழக அரசுப்பேருந்து

மாறிவரும் சமூகவலை தளயுகத்திற்கு ஏற்ப தங்களின் சேவை தரத்தை வழங்கி வரும் தனியார் பேருந்துகளில் தொலைக்காட்சி, ஆடியோ சிஸ்டம் என்பதனை கடந்து இலவச வை-ஃபை  வசதிகளை வழங்க தொடங்கியுள்ளதால் இதுபோன்ற பேருந்துகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாகர்கோவிலிலிருந்து சென்னை வரை இயக்கப்படுகின்ற திருநெல்வேலி மண்டல அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில்  இலவச ஆன்போர்டு வை-ஃபை சேவை வழங்கப்பட்டுள்ளது.

எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவுப் பேருந்து போன்ற 2+2 இருக்கை அமைப்பை கொண்ட இந்த பேருந்துகளில் சென்னையிலிருந்து நாகர்கோவில் வரையும் , நாகர்கோவிலிலிருந்து சென்னை வரையும் இயக்கப்படுகின்றது. 700 கிமீ தொலைவு கொண்ட 12 மணி நேர பயண தூரத்தை சிரமமின்றி நவீன தலைமுறையினர் அரசு பஸ்களில் மேற்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே சமயத்தில் 32 நபரங்கள் இணைக்கும் வகையிலான வை-ஃபை சிஸ்டத்தை பெற்றுள்ள நெல்லை நாஞ்சில் ராஜா பேருந்துகளில் மற்றொரு அம்சமாக மொபைல் சார்ஜ் குறையும் பட்சத்தில் சார்ஜ் செய்யும் வகையிலான 5 பிளக் பாயின்ட்களும் வழங்கப்பட்டுள்ளது. இலவச வை-ஃபை பாஸ்வோர்டு (nanjilraja) ஒட்டுநர் இருக்கையின் பின்புறம் எழுதப்பட்டுள்ளது.

நவீன தலைமுறையினர் விரும்பும் வசதிகளை வழங்குவதனால் மக்கள் மத்தியில் விரைவாக எந்தவொரு பிராண்டின் மதிப்பும் உயரும் என்பதே உண்மை என்பதற்கு ஏற்ப இலவச வைஃபை வசதியை பெற்றுள்ள பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது,என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படங்கள் உதவி : facebook.com/subramonian.pazhani.5

Exit mobile version