Site icon Automobile Tamilan

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் வருகை எப்பொழுது

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள முதல் மாடலான பிஎம்டபிள்யூ  ஜி310 ஆர் பைக் அடுத்த ஆண்டின் மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கினை டிவிஎஸ் மோட்டார்ஸ் ஓசூரில் தயாரிக்க உள்ளது.

 

500சிசிக்கு குறைவான பிஎம்டபிள்யூ நேக்டு ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிளான ஜி310 ஆர் பைக்கில் பைக்கில் 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 28Nm பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள தொடக்கநிலை ஜி வரிசையில் மொத்தம் 3 மோட்டார்சைக்கிள்கள் வரவுள்ளது.அவை பிஎம்டபிள்யூ ஜி310ஆர் , டிவிஎஸ் அகுலா 310 மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் ஆகிய மாடல்கள் அடுத்த ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

மூன்று மாடல்களுமே தோற்றம் மற்றும் வடிவம் பிரிவுகளில் மாறுபட்டாலுமே ஒரே 313 சிசி இன்ஜினை பெற உள்ளது.மூன்று பைக்குகளுமே ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது.

நேக்டு ஸ்போர்ட்டிவ் மாடல் ஜி310 ஆர் அடுத்த வருடத்தின் மார்ச் முதல் மே மாத காலகட்டத்திலும் .டிவிஎஸ் அப்பாச்சி 300 பைக்கும் அதே காலகட்டத்திலும் ,அட்வென்ச்சர் ரக மாடலான ஜி310 எஸ் 2017யின் இறுதியிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

Exit mobile version